சைபர் திருட்டு குற்றங்களிலிருந்து தப்பிப்பது எப்படி..? இதோ போலீஸின் டிப்ஸ்கள்!
இந்தியாவில் சைபர் குற்றங்கள் எனப்படும் இணைய வழி குற்றங்கள் பெருகிவரும் நிலையில், சைபர் குற்றத் தடுப்பு காவல் துறையினரின் டிப்ஸ்களை வழங்கி, அவற்றைப் பின்பற்றும்படி கேட்டுக் கொள்கின்றனர்.
இந்தியாவில் சைபர் குற்றங்கள் பெருகிவிட்டன. இணையம், செயலிகள் வழியாகக் கோடிக்கணக்கில் பணத்தைத் திருடும் இணையவழி மோசடியாளர்கள் இந்தியாவுக்குள் மட்டுமல்ல, வெளிநாடுகளிலிருந்தும் இயங்குகிறார்கள். இதுபோன்ற மோசடிகளிலிருந்து தப்பிப்பது எப்படி? இதற்கு சைபர் குற்றத் தடுப்பு போலீஸார் சில டிப்ஸ்களை வழங்குகின்றனர். அதைப் பின்பற்றினால், சைபர் குற்றங்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.
* உங்கள் ஃபோனை ‘டிராய்’ துண்டிக்கப் போகிறது என்று அழைப்பு வந்தால், அதைப் பொருட்படுத்த வேண்டாம்.
* கைபேசி எண்போல அல்லாமல் ‘FedEx’ எனப்படும் வாடிக்கையாளர் சேவை அழைப்பில் 1 அல்லது ஏதாவது வேறு எண்ணை அழுத்துமாறு கேட்டால், புறந்தள்ளுங்கள்.
இதையும் படிங்க: சீன நிறுவனத்துடன் சேர்ந்து சைபர் மோசடி... கோடி கோடியாய் சம்பாத்தித்த திருச்சி இளைஞரை கொத்தாகத் தூக்கிய போலீஸ்..!
* காவல் அதிகாரி என்று போனில் அழைத்து உங்கள் ஆதார் எண் பற்றியெல்லாம் விசாரித்தால் பேசினால், பதிலளிக்க வேண்டாம்.
* உங்களை 'டிஜிட்டல் கைது' செய்வதாகச் சொன்னால் பதற்றமடையாதீர்கள். அழைப்பிலிருந்து வெளியேறிவிடுங்கள்.
* உங்களுக்கோ அல்லது உங்களால் அனுப்பப்பட்ட பார்சல்களில் மருந்துகள், போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றோ சொன்னால் பதில் சொல்ல வேண்டாம்.
* ஒருவேளை போனில் பேசுவோர், இதைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னால், உடனே சைபர் குற்றத் தடுப்பு காவல் துறையினருக்கு 1930இல் தகவல் தெரிவியுங்கள்.
* வாட்ஸ்அப், எஸ்.எம்.எஸ். மூலம் தொடர்புகொண்டால் பொருட்படுத்தாதீர்கள்.
* யுபிஐ மூலம் உங்களுக்குத் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாகவும், அந்தப் பணத்தைத் திரும்ப அனுப்பும்படி போன் செய்தால், அவர்களுக்குப் பதிலளிக்க வேண்டாம்.
* உணவு விநியோக நிறுவனங்களிலிருந்து அழைப்பதாகக் கூறி, 1 அல்லது வேறு ஏதாவது எண்ணை அழுத்தி, உங்கள் முகவரியை உறுதிப்படுத்தச் சொன்னால், அதை செய்யாதீர்கள்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைபேசி வழியாக ஓடிபியை எவருடனும் பகிர வேண்டாம்.
* வீடியோ அழைப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டாம்.
* நீல நிறத்தில் எழுதப்பட்ட எந்த இணையச்சுட்டியையும் அழுத்த வேண்டாம்.
* புலனாய்வு அமைப்புகளின் பெயர்களில் உங்களுக்கு நோட்டிஸ் வந்தாலும்; அதை சரிபார்த்து உறுதி செய்துகொள்ளுங்கள்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இவை அனைத்துமே இணையவழித் திருடர்கள் பின்பற்றும் பல்வேறு மோசடி உத்திகள்கள்தான். சற்றே கவனம் தவறிவிட்டாலும்கூட சைபர் திருடர்கள் கைவரிசையைக் காட்டிவிடுவார்கள்.
இதையும் படிங்க: குழந்தை இல்லாத பெண்ணை "கர்ப்பம்" ஆக்கினால், ரூ.10 லட்சம்; 'நூதன ஃபிராடு' அம்பலம்: 3 பேர் கைது...