நான் இருக்கேன் ...தி.மு.க. ஆட்சியை அகற்ற விட மாட்டேன்..பாஜகவை அலறவிட்ட வைகோ!
பா.ஜ.க-வால் தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாது.நான் இருக்கும் வரை தி.மு.க. ஆட்சியை அகற்ற விட மாட்டேன் என வைகோ சூளுரைத்துள்ளார்
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கிறது. 200 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். பா.ஜ.க-வால் தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாது.நான் இருக்கும் வரை தி.மு.க. ஆட்சியை அகற்ற விட மாட்டேன் என்று சூளுரைத்தார் .
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டு பணியாற்றுகிறார். அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். பெண்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைவருக்குமான திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். மற்ற மாநிலங்களுக்கு தமிழக அரசின் திட்டங்கள் எடுத்துக்காட்டாக உள்ளது . திமுக தலைமையிலான எங்கள் கூட்டணியில் நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம் எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை, திமுக அணியை இன்னும் வலுப்படுத்தி வெற்றி பெற செய்வோம், வலது தோளாகவும் இடது தோளாகவும் இருந்து திமுகவுக்கு நாங்கள் பாடுபடுவோம் என்றார் .
தொடர்ந்து பேசிய வைகோ அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் ரசிக்கும் படியாக இருந்தது என்றும் யார் வேண்டும் என்றாலும் கட்சி ஆரம்பிக்கலாம் விஜய்யால் திமுக அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2025ல் திடீர் திருப்பம்... 75 வயதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு திரும்புகிறாரா மோடி..? பேரலையாய் பிரவாகம் எடுக்கும் அரசியல்..!