இஃப்தாரில் மட்டும் கஞ்சி குடித்துவிட்டு… இந்துக்கள் விழாவில் பங்கேற்காவிட்டால் அம்பலப்பட்டுப் போவீர்கள்- ஆர்.எஸ்.மணி
அந்தக்காலத்தில் சிபிஎம் கட்சி மட்டும்தான் இஃப்தாரில் கலந்து கொள்ளாத கட்சி. ரம்ஜானை மதச் சார்புள்ள நிகழ்ச்சியாகத்தான் அவர்கள் பார்க்கிறார்கள்
'உங்களுக்கு கோபம் வருதுன்னா... இன்னும் 100 முறை ரமலான் வாழ்த்துகளைச் சொல்லிக்கொண்டே இருப்போம்'' என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, ராயப்பேட்டையில், வக்ஃபு வாரிய ஏற்பாட்டில் நடைபெற்ற சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அப்போது பேசிய அவர், ''புனித ரமலான் நோன்பு திறப்பதில் பங்கேற்பதில் உங்கள் அனைவரையும் போல் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். புனித ரமலான் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். ரம்ஜானுக்கு நாம் வாழ்த்து சொல்வதை பார்க்கும்போது பல பேருக்கு கோபம் வருகிறது. அதைப்பற்றி எல்லாம் நமக்கு கவலை இல்லை.
நாம் ரமலானுக்கு வாழ்த்து சொல்வது பலருக்கு கோபம் வருகின்றது என்றால் இன்னும் நூறு முறை அல்ல மீண்டும் மீண்டும் 100 முறை ரமலான் வாழ்த்துக்களை சொல்வோம்... சொல்லிக்கொண்டே இருப்போம். இந்தியாவிலேயே இன்றைக்கு சிறுபான்மை மக்கள் தங்கள் சொந்த வீடு போல கருதும் ஒரு மாநிலம் என்றால் நம்முடைய தமிழ்நாடு என்று நாம் தைரியமாக சொல்லலாம். சிறுபான்மை மக்களுடைய மனதில் பெரும்பான்மை இடத்தைப் பிடித்த ஒரு அரசு என்றால் அது நம்முடைய திராவிட மாடல் அரசுதான்'' எனத் தெரிவித்தளார்.
இதையும் படிங்க: வேலூரில் களைகட்டிய மயான கொள்ளை விழா.. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
உதயநிதியின் இந்தப்பேச்சுக்கு பிற மதத்தினர் பலரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ''நீங்கள் ரம்ஜான் வாழ்த்து சொன்னால் மற்றவர்களுக்கு ஏன் கோபம் வரப்போகிறது? உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்லிக் கொண்டு ஏன் குறிப்பிட்ட மத விழாக்களில் கலந்து கொள்ளவோ, வாழ்த்து சொல்லவோ மறுக்கிறீர்கள்? பிறகு எப்படி மதச்சார்பற்றவர்களாக உங்களை அழைத்துக் கொள்கிறீர்கள்'' என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான மணி, ''ரம்ஜான் நோன்பு தொடங்கி விட்டது. ஆகையால் திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் அனைவரும் இஃப்தாரில் கலந்து கொள்வார்கள். குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிப்பார்கள். இதுதான் அவர்களின் மதச்சார்பின்மைக்கு மிகச்சிறந்த அடையாளம்.
ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு அந்த பூஜையில் கலந்து கொண்டால் அவர்கள் மதவாதி. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில்கலந்து கொண்டால் இந்துத்துவாவதி. இஃப்தார் நோன்பில் கலந்து கொண்டால் நீங்கள் மதச்சார்பற்ற அரசியல்வாதி. கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டால் மதச்சார்பற்ற அரசியல்வாதி. கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் கலந்துகொண்டு வெள்ளை சீடை சாப்பிடுபவர்கள் மதவெறியன். இதுதான் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மதச்சார்பின்மை தன்மைக்கான அளவுகோல்.
நான் என்ன சொல்கிறேன் என்றால், இஃப்தாரின் கலந்து கொண்டு கஞ்சி குடி. கிறிஸ்துமஸ் விழாவிலும் கலந்து கொண்டு கேக் சாப்பிடு. அதேபோல தைப்பூசத்திற்கும் போ.. விநாயகர் சதுர்த்தியில் கலந்து கொள். கிருஷ்ணர் ஜெயந்தியில் வெள்ளை சீடை சாப்பிடு... ஐயப்பன் பூஜையிலும் கலந்து கொள். எல்லாவற்றிலும் கலந்து கொள். ஒவ்வொரு மதங்களும் எங்கள் வழி என்று சொல்கிறது. அதை நோக்கி நகர்கிறது. ஆனால் இனிமேல் இஃப்தாரில் மட்டும் கலந்து கொண்டு, விநாயகர் சதுர்த்தியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொன்னால் மக்கள் மனதில் நீங்கள் அம்பலப்பட்டு நிற்பீர்கள்.
அந்தக்காலத்தில் சிபிஎம் கட்சி மட்டும்தான் இஃப்தாரில் கலந்து கொள்ளாத கட்சி. ரம்ஜானை மதச் சார்புள்ள நிகழ்ச்சியாகத்தான் அவர்கள் பார்க்கிறார்கள்'' என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கேரளா கோயில் திருவிழாவில் கோர விபத்து.. 12 வயது சிறுவன் உட்பட 5 பேர் படுகாயம்..!