'ட்ரம்புக்கே வியூகம் சொல்லிக் கொடுப்பவன் நான்..!' விஜயால் சீற்றம் கொண்ட சீமான்..!
பீகார்காரனுக்கு அறிவு இருக்கு. தமிழ்நாட்டில் இருப்பவனுக்கு அறிவு இல்லையா? உலகத்துக்கு அறிவை கடன் கொடுத்தவன்யா தமிழன்.
''உலகத்துக்கு அறிவை கடன் கொடுத்தவன்யா தமிழன். நான் இந்தியாவுக்கே தேர்தல் வியூகம் செய்கிறேன்'' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முழங்கியுள்ளார்.
தவெகவுக்காக தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர். ''பீகாரில் இருந்து பிரசாந்த் கிஷோர் எதற்கு என்று கேட்கிறேன். தமிழ்நாட்டிலேயே மாபெரும் மேதைகள் இருக்கிறார்கள். எல்லாக்கட்சிகளிலும் அறிஞர் பெருமக்கள் இருக்கிறர்கள்.
என் தம்பிகள் ஜான் ஆரோகிய சாமி, ஆதவ் அர்ஜூனா என இருவரிருக்கிறார்களே. அப்புறம் பீகாரில் இருந்தது ஒருத்தன் எதற்கு? பீகார்காரனுக்கு அறிவு இருக்கு. தமிழ்நாட்டில் இருப்பவனுக்கு அறிவு இல்லையா? உலகத்துக்கு அறிவை கடன் கொடுத்தவன்யா தமிழன். நான் இந்தியாவுக்கே தேர்தல் வியூகம் செய்கிறேன். கொஞ்சம் காசு கொடு. உலகத்துக்கே ட்ரம்பு கிம்பு எல்லோருக்குமே தேர்தல் வியூகம் செய்து தருகிறேன்.
இதையும் படிங்க: சம்மனுக்கு ஆஜராகாமல் கல்தா... சீமான் வீட்டிற்கே வந்த போலீசார்... நீலாங்கரையில் பரபரப்பு...!
வியூக வகுப்புகள் எல்லாம் எனக்கு பிடிக்காது. இந்த நாட்டை ஆட்சி செய்த எங்கள் முன்னோர்கள் எல்லாம் வியூகம் வகுக்கவில்லை. எங்கள் தாத்தா பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்ற பெருந்தகைகளோ, அதற்கு முன்பிருந்த குமாரசாமி ரெட்டியார் எல்லாம் இப்படி வீயூக வகுப்பாளர்களை வைத்துக்கொண்டா வெற்றி பெற்றார்கள். என் நாடு, என் மக்கள், என் காடு. என் மண். இதில் எதை எப்படி செய்தால் எப்படி வரும் என்று தெரியாத நான் அப்புறம் ஏன் அரசியலுக்கு வரவேண்டும். ஜெயங்கொண்டத்தில் யாரை நிறுத்தினால் வெல்லலாம், அரியலூரில் யார்? ஸ்ரீபெரும்புதூரில் யார்? இது கூட தெரியாமல் நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்.
எனக்கு நிறைய மூளை இருக்கிறது. காசு தான் இல்லை. அதனால் எனக்கு அது தேவையில்லை. கத்திரிக்காய் என்று தாளில் எழுதி பிரயோஜனம் இல்லை. நிலத்தில் இறங்கி விதையை போட்டு, செடியை முளைக்க வைத்து, தண்ணியை ஊற்றி, உரத்தை வைத்து, விளைய வைத்து வாழ வைக்க வேண்டும். அப்பொழுதுதான் கத்திரிக்காய் வரும். மேசையில் உட்கார்ந்து கத்திரிக்காய், சுரக்காய் என்று சொல்வதில் பிரயோஜனம் இல்லை. குறிப்பிட்ட காலமாய் இந்த நோய் வந்துவிட்டது. பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டில் என்ன தெரியும்?
எத்தனை ஆறு, எத்தனை ஏரி, எத்தனை குளம், எத்தனை சமூக மக்கள்... அந்தந்த சமூக மக்களுக்கு இருக்கிற பிரச்சனை என்ன? என்பதெல்லாம் பிரசாந்த் கிஷோருக்கு தெரியுமா? உடலில் கொழுப்பு கேள்விப்பட்டு இருப்பீர்கள். பண கொழுப்பு கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? சிலர் வசனம் சொல்லுவார்கள். உனக்கு வாய் கொழுப்பு அதிகம். இந்த கொழுப்பு அதிகம், அந்த கொழுப்பு அதிகம் என்பார்கள். அது மாதிரி பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும். அதைப் பற்றி பேசி காலத்தையும், நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்.
துன்பத்தோடு, கவலையோடு, கண்ணீரோடு வீதியில் நின்று போராடுகிற எல்லா மக்களோடும் நான் கூட்டணி வைத்து இருக்கிறேன், அப்போது நான் தனித்து இல்லையே, நான் தலைவர்களை நம்பி கட்சி கட்சி ஆரம்பித்தவன் அல்ல. தமிழர்களை நம்பி கட்சி ஆரம்பித்தேன், எனக்கு கீழ் இருக்கக்கூடிய இளைய தலைமுறை நம்பி கட்சி ஆரம்பித்தேன். தம்பி, தங்கைகளை நம்பி கட்சியை ஆரம்பித்தேன். ஆகையால் என்னை ஒருவனையாவது விட்டு விடுங்கள். இந்த சாமி இந்த சாதிக்கு, இந்த சாமி இந்த சாதிக்கு, இந்த சுடுகாடு இந்த சாதிக்கு, இந்த கோவில் இந்த சாதிக்கு என்று இருக்கிறது அல்லவா.
என்னையாவது பொதுவாக விட்டு விட்டீர்கள் என்றால் நல்லது. இந்த தமிழ்நாட்டில் எல்லா தலைவர்களுக்கும், முன்னோர்களுக்கும் மாலை போட்டுவிட்டு எல்லாராலும் இறங்கி வந்துவிட முடியும் என்று என்று நினைக்கிறீர்களா? என் ஒருவனால் மட்டும் தான் முடியும். ஏனென்றால் நான் ஒருவன் மட்டும் தான் தமிழ் தாயின் மகனாக இருக்கிறேன். மற்றவர்கள் எல்லாம் சாதி சார்ந்து, மதம் சார்ந்து தமிழர்களை சுருக்கி விட்டார்கள்.
பாரதிதாசனைக் கூட சாதி குறியீடு வைத்து தான் பேசுகிறார்கள். காமராஜர் என்றால் அது ஒரு இது. தாத்தா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்றால் அது ஒரு இது. எல்லோரையும் சாதிக் குறியீடாக வைத்து முடக்கி விட்டார்கள். எங்களுக்கு ஒரு கெடுவாய் எங்கள் அண்ணன் தமிழரசன் போன்றவர்கள் நீண்ட நாள் வாழ முடியாது. இல்லை என்றால் சா என்றாலே சாவுடா என்று முடித்து இருப்பார்கள். என்ன செய்வது? எங்களைப் போன்ற எளிய பிள்ளைகள் அல்லாடி கொண்டு இருக்கிறோம்'' என தெரிவித்தார்
இதையும் படிங்க: தமிழக அரசுக்கு தில் இருந்தால் இதைச் செய்ய முடியுமா..? பாஜக- திமுக இடையே சிண்டு முடியும் சீமான்..!