'அடிச்ச அடில எல்லோரும் போட்டோவை தூக்கிட்டு திரியுறாங்க.... சோளி முடிஞ்சது..!' ட்ராக் மாறும் சீமான் அரசியல்..?
இன்னும் இரண்டு தேர்தல்களில் அதிகாரத்தை நிர்ணயிக்கிறவனாக அவன் நிற்பான். இப்போதே கோவை தெற்கில் யார் ஆள வேண்டும் என்பதை அவன் தான் தீர்மானிப்பான்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்தாரா? அவருடன் எடுத்த போட்டோ எடிட்டிங் செய்யப்பட்டதா? என்கிற சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சீமான், பிரபாகரனை சந்திக்கவில்லை அவருடன் எடுத்த போட்டோவை எடிட் செய்து கொடுத்தது நான் தான் என்று இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கிளப்பிய புயல் தான் சில வாரங்களாக தமிழக அரசியலில் புயலாக மையம் கொண்டிருக்கிறது. ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள சீமான், '' போலி என்பதற்கான ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம். அந்த புகைப்படத்தில் இருக்கும் போட்டோவில் நானும், என் அண்ணனும் ஒட்டி வெட்டியதாக சொன்னீர்களே... அதற்கு ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். 15 வருடங்களாக இந்தப் படம் இருந்தது. அப்போதெல்லாம் எங்கே போய் படுத்திதீர்கள். இந்த படத்தை நான் தான் எடிட் செய்து கொடுத்தேன் என்று சொல்பவர்கள் அப்போதே இதை சொல்லி இருக்கலாம் அல்லவா? எங்கே எடிட் செய்ததை நிரூபித்துக் காட்டுங்கள்'' என சவால் விடுத்தார்.
இந்நிலையில் ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், இந்த போட்டோ எடிட் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ''அடிச்ச அடில, போட்ட போடுல எல்லாரும் போட்டோவை தூக்கிட்டு திரியுறாங்க.. கதை முடிஞ்சிபோச்சு. எங்க அண்ணன் கவுண்டமணி சொன்னது மாதிரி, சோளி முடிஞ்சுபோச்சு'' எனப் பேசிக் கொண்டிருந்தவர் பேச்சை வடநாட்டுக்காரர்கள் தமிழகம் வருவது பற்றி மாற்றினார்.
இதையும் படிங்க: 'சீமான்- பிரபாகரன் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதில்லை..!' ரகசியத்தை உடைத்த புகைப்பட தடயவியல் நிபுணர்..!
இங்கு உழைப்பு தேவை அப்படியே இருக்கும்போது இங்கு இந்திக்காரன் வர்றான். இந்தியை திணித்தான் எதிர்த்தோம். இந்திக்காரணை திணிக்கிறார். எதிர்க்கமுடியாமல் தவிர்க்கிறோம்.இன்னைக்கு ரோட்டில் கடை முன்னால் நிற்பவர்கள் எல்லாம் ஹிந்திக்காரர்களாகவே இருக்கிறார்கள். இன்னைக்கு அவன் கூலி, எழுதி வைத்துக் கொள் சரியாக 10 ஆண்டுகளுக்கு பிறகு அவன் தான் முதலாளி. இந்தப்படையெடுப்பு தான் பண்பாட்டுப்படையெடுப்பு. கலாச்சாரப் படையெடுப்பு. இந்திக்காரன் கடைகளில் வேலை செய்வான். ஹோட்டலில் வேலை செய்வான். நானே பார்த்து இருக்கிறேன். அவனோடு பேசுவதற்கு நம்ம ஆட்கள் இந்தியில் ச முயற்சிக்கிறார்கள். ஆவால், அவன் தமிழை கற்றுக் கொள்ள மாட்டான். அவனுடன் பேச நாம் தான் இந்தியை தேடிக் கொண்டு இருக்கிறோம்.
இதுதான் ஒரு மாபெரும் இன அழிவு. ஒன்றரை கோடி இந்திக்காரன் தமிழ்நாட்டுக்கு வந்துட்டான் அவனுக்கு வேலை மட்டும் கொடுக்கல. வாழ்கிற உரிமை மட்டும் கொடுக்கல. ஓட்டுரிமையை கொடுத்து விட்டோம். இன்னும் இரண்டு தேர்தல்களில் அதிகாரத்தை நிர்ணயிக்கிறவனாக அவன் நிற்பான். இப்போதே கோவை தெற்கில் யார் ஆள வேண்டும் என்பதை அவன் தான் தீர்மானிப்பான். ஈரோட்டில் அவன் தான் தீர்மானிப்பான். அவனுக்கு இனி யாரு, என்ன, எதைப்பற்றியும் கவலை கிடையாது'' எனத் தெரிவித்தார்.
சீமான் எப்போதும் அடிக்கடி தனது பேச்சையும், கருத்தையும் மாற்றிக் கொண்டே இருப்பார். வடநாட்டுக்காரர்கள் தமிழக வருகை குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு பலமாக எதிர்ப்ப்புத் தெரிவித்தார். சமீபகாலமாக பெரியார் பற்றி கருத்துக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் வடநாட்டு தொழிலாளர்கள் பற்றி இப்போது ஆரம்பித்து இருக்கிறார். இனி இதுதான் அவரது அடுத்தடுத்த மேடைகளில் பேச்சாக இருக்கக்கூடும்.
இதையும் படிங்க: '10 நிமிட சந்திப்பு... வெளிவராத புகைப்படங்கள்... உளவு பார்த்தாரா சீமான்..?' - புது பகீர் கிளப்பும் ராஜீவ்காந்தி..!