சல்லி சல்லியா நொறுங்கிய அண்ணாமலை இமேஜ்... தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தெறிக்கவிடும் போஸ்டர்கள்..!
உலக தாய் மொழி தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ் வாழ்க என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது.
சுவரொட்டியில் இந்தி வேண்டாம், இந்தியை திணிக்காதே என்பதை வலியுறுத்தும் வகையில் படங்கள் இடம் பெற்று உள்ளன. அத்துடன் அண்ணாமலை, பிரதமர் மோடி ஆகியோரது படங்களும் இடம் பெற்றுள்ளது.
புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் மும்மொழி கல்வியை அமல்படுத்திட வேண்டும் என்று மத்தியஅரசும், மும்மொழியை அமல்படுத்திட மறுப்பதால் கல்விக்கு கொடுக்க வேண்டிய தொகையை தரமாட்டோம் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதும் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இரு மொழி கொள்கையே போதும் என்றும் மும்மொழி முறையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் மாநிலம் முழுவதும் இளைஞர்களும் , பொதுமக்களும் பல்வேறு வகையில் எடுத்துரைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடித்து ஆடும் அண்ணாமலை & கோ.. செம்ம குஷி ஆகிப்போன பி.எல் சந்தோஷ்..!
புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழக கல்வித்துறைக்கான நிதியைத் தர மாட்டோம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதைக் கண்டித்து, இன்று முதல் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர். ஏற்கனவே மத்திய அரசின் கருத்தைக் கண்டித்து தமிழத்தின் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு எல்லாம் ஒரு படி மேலாக, சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் "தமிழகத்திற்கான நிதி எங்கே?", "இந்தியைத் திணிக்காதே" போன்ற வாசங்கங்களுடன் வண்ண கோலமிட்டு இல்லத்தரசிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்நிலையில் உலக தாய்மொழி தினமான இன்று தாய் மொழியாம் தமிழ் மொழியை போற்றும் வகையில் தமிழத்தின் பல்வேறு பகுதிகளும்
'தமிழ் வாழ்க' என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக சேலத்தில் பழைய பேருந்து நிலையம், ஐந்து ரோடு, அஸ்தம்பட்டி ,
புதிய பேருந்து நிலையம் என பொதுமக்கள் அதிக அளவு கூடும் பகுதிகளில் தமிழ் வாழ்க என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் இந்தி மொழியை திணிப்பதை எதிர்க்கும் வகையிலான வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. அத்துடன் அண்ணாமலை, பிரதமர் மோடி ஆகியோரின் படங்களும் இடம் பெற்றுள்ளன.
தாய்மொழி தினமான இன்று தாய்மொழியாம் தமிழ்மொழியை போற்றும் வகையில் தமிழ் வாழ்க என்ற வாசகங்களுடன் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருப்பது பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.
இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம். பிப் 21., உலக தாய்மொழி தினத்தன்று ஹிந்தி மொழி எழுத்துக்களை அழித்தவாறு தமிழ் வாழ்க என எழுதப்பட்ட போஸ்டர்கள் ராணிப்பேட்டையில் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆங்காங்கே தமிழ் வாழ்க என எழுதப்பட்டு அதற்கு கீழ் இந்தி மொழி எழுத்துக்களை எழுதி அதனை அழித்தது போல போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
உலக தாய் மொழி தினமான இன்று காலை ராணிப்பேட்டை சார் ஆட்சியர் அலுவலகம், முத்துக்கடை பேருந்து நிலையம் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தமிழ் வாழ்க என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த வாசகத்திற்கு கீழே இந்தி மொழி எழுத்துக்களை எழுதி அதனை அழித்தவாறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உலகத் தாய்மொழி நாள்.. மு.க.ஸ்டாலின், அண்ணாமலை கூறியது என்ன..?