×
 

எம்.ஜி.ஆர்- ஜெயலலிதாவை புறக்கணித்துவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவமா..? போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன்..!

எம்.ஜி.ஆர்,- ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் செயல்பட்ட ஒர் முக்கிய தலைவர்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டக் குழு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை; எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என அதிமுகவின் மூத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

''என்னைப் பொறுத்தவரையில் அத்திக்கடவு- அவிநாசி திட்ட விழாவிற்கு ஏற்பாடு செய்தவர்கள் மூன்று நாட்களுக்கு முன்னால் என்னை சந்தித்தார்கள், சந்திக்கிறபோது நான் அவர்களிடத்தில் வைத்த வேண்டுகோள் என்னவென்று சொன்னால், என்னை வளர்த்த புரட்சித்தலைவர்- புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய திருவுருவப் படங்களை இல்லை. என்னிடத்திலே கலந்து இருந்தால் அதை நான் உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பேன். ஆகவே என்னை வளர்த்த ஆளாக்கிய உருவாக்கிய அவர்களின் திருவுருவப்படங்கள் இல்லை.

 அதே நேரத்தில்  அத்திக்கடவு திட்டத்தை கொண்டுவர 2011-ல் ஜெயலலிதா ரூ.3.72 கோடி அளித்தார்; திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை. அப்போது நம்முடைய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆக இருந்த ராமலிங்கம்  ஆய்வு செய்வதற்கு உத்தரவிட்டார். ஆகவே இந்த பணிகளை துவங்கிய நேரத்தில் அம்மா அடித்தளமாக இருந்திருக்கிறார்.திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை. ஆகவே நான் விழாவில் பங்கேற்கவில்லை'' என அவர் விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிங்க: இண்டியா கூட்டணிக்கு சம்மட்டி அடி- மக்கள் பாஜகவை விரும்புகிறார்கள்: எடப்பாடி பழனிசாமி..!

அன்னூரில், அத்திக்கடவு - அவினாசி திட்ட குழு சார்பில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நம்பியூர், வேமாண்டாம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அதிக அளவில் பயன் பெற்று வரும் நிலையில் இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது, அப்பகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகளிடையே கோஷ்டி பூசல் நிலவுகிறதா என்ற சந்தேகம் எழுந்தது.

அண்ணா திமுகவின் மூத்த அரசியல்வாதியும் மூன்று முதல்வர்களின் அமைச்சரவையில் இடம்பெற்று அண்ணா திமுகவின் கொள்கையை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் சுய நலமில்லாதவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். தான் இருக்கும் கட்சியில் எந்தவித சுயநலமும், எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நேர்மையாக பணியாற்றி அ.தி.மு.க-வில் உள்ள உறுப்பினர்களின் நன்மதிப்பை பெற்று வருபவர். எம்.ஜி.ஆர்,- ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் செயல்பட்ட ஒர் முக்கிய தலைவர். செங்கோட்டையனை பொறுத்தவரையில் மாற்றுக் கட்சியினர்கூட 45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் குறை சொல்லாத வண்ணம் என் வாழ்க்கை பயணத்தில் நேர்வழியில் சென்று கொண்டு இருப்பவர். 

இந்நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார். ஏற்கனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் ஓர் அணியாகவும், சசிகலா தலைமையில் ஒரு தனி அணியும் இயங்கி வருகிறது. டிடிவி. தினகரன் அமமுக எனும் தனிக்கட்சியையே நடத்தி வருகிறார். இந்நிலையில், செங்கோட்டையனின் அதிருப்தி அதிமுகவில் மேலும் விரிசலை தூண்டுமோ என தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: பெண் எஸ்.ஐ ஆடையை கிழித்து தாக்கிய விசிக நிர்வாகி; திமுக அரசை வெளுத்து வாங்கிய எடப்பாடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share