×
 

விஜய்க்கு வேட்டு வைக்கிறாரா புஸ்ஸி ஆனந்த்..? தெளிவில்லாத தலைவரால் தெளியாமல் தவிக்கும் தவெக நிர்வாகிகள்..!

புஸ்ஸியின் அதிகாரத்தினால் கட்சியில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளை உணர்ந்த விஜய் மீது ரொம்பவே எரிச்சலில் உ ள்ளாராம். 

பெயரளவில்தான் தலைவர் என்று இருக்கிறார் விஜய்.  எல்லா முடிவுகளையும் புஸ்ஸி ஆனந்துதான் எடுக்கிறார் என்று தவெக நிர்வாகிகள் பலர் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டிலேயே கட்சி இதே நிலைமையில் சென்றால் 2 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடியும் என்று பேசிய தவெக வியூக நிபுணர் ஜான் ஆரோக்கியசாமியின் ஆடியோ வெளியாகி விஜய் தலையில் மேலும்  ஒரு இடியை இறக்கி இருக்கிறது.

ஒரு புதிய கட்சியில் மாற்றுக்கட்சியினர் வந்து சேருவதுதான் வழக்கம்.  அதற்கு இடம்கொடுக்காமல் இருக்கிறார் புஸ்ஸி என்று ஜான் ஆரோக்கியசாமியே குமுறி கொதிக்கிறார். புதுக் கட்சியில் மாற்றுக்கட்சியினர் வந்து சேரும் நிலை மாறி, தவெகவில் இருந்து பலரும் வெளியேறத் தொடங்கிவிட்டனர்.

இதையும் படிங்க: ஆடியோ லீக்-ஆடிப்போன புஸ்ஸி..! விஜய் எடுக்கும் அடுத்த முடிவு என்ன?

‘‘தவெகவில் நிர்வாகக் குளறுபடிகள் அதிகம் உள்ளது. நிர்வாகிகளின் செயல்பாடுகளும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஆகையால் விஜயை நம்பி வந்தவர்கள் வந்த வேகத்திலேயே நொந்து வெளியேறுகிறார்கள். காரைக்கால் மாவட்ட தவெக வழக்கறிஞர் அணி, தவெக உறுப்பினர் அட்டையை கிழித்து போட்டுவிட்டு கூண்டோடு வெளியேறி இருக்கிறார்கள். இந்த விவகாரம் வேறு பெரிதாக வெடித்துள்ளது.

இந்த தகவல்கள்  விஜயை ரொம்பவே கவலையடையச் செய்துள்ளது.   புஸ்ஸி ஆனந்துக்கு மட்டுமே அதிகம் ம்உக்கியத்துவம் கொடுப்பதால்தான் மற்ற நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்கள். புஸ்ஸியின் அதிகாரத்தினால் கட்சியில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளை உணர்ந்த விஜய் மீது ரொம்பவே எரிச்சலில் உ ள்ளாராம். 

இதனால் விஜய்யை சரிக்கட்ட வேண்டும் என்பதற்காகவும், இந்த அதிருப்தி நிலைமையை சாக்காக வைத்துக்கொண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளே நுழைந்துவிடுவாரோ என்கிற அச்சத்தில் கட்சிக்குள் சில அவசர நடவடிக்கைளை எடுக்க திட்டமிட்டிருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்.

அதனால் அவசர அவசரமாக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார் புஸ்ஸி.  நேற்றைக்கு கட்சியின் கூட்டத்தைப்பற்றி விஜய்யிடம் புஸ்ஸி சொன்னபோது, ‘‘எனக்கு ஷூட்டிங் இருக்கு. அதுதான் முக்கியம். அதை கேன்சல் பண்ண முடியாது. உங்க இஷ்டத்துக்கு என்னால ஆட முடியாது’’ என்று சொல்லி சத்தம் போட்டிருக்கிறார் விஜய்.

ஆனால், விஜய் கூட்டத்திற்கு வருவதாகச் சொல்லியே நிர்வாகிகளுக்கு போன் போட்டு அழைத்திருக்கிறார் புஸ்ஸி ஆனந்த். இன்று காலையில் விஜய் வராமல் புஸ்ஸியே மீட்டிங் நடத்தியதால் நிர்வாகிகளுக்கு கடும் அதிருப்தி.

‘‘அடுத்த வாரம் மாவட்ட செயலாளர்களை அறிவிக்க இருக்கிறார் விஜய். அதற்கு முன்பாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மா.செ.க்களுடன் தனித்தனியாக சந்தித்து உரையாடுகிறார்’’ என்று வந்திருந்த நிர்வாகிகளிடம் பேசி சமாளித்த புஸ்ஸி ஆனந்த்,  இந்த தகவலையே தவெக ஐடி விங் ஆட்களை வைத்துக்கொண்டு பரப்பி வருகிறார்.

விஜய்க்கு தெரியாமலேயே இஷ்டத்திற்கு அடித்து விடுகிறார் புஸ்ஸி ஆனந்த் என்கிற விஷயம் ஜான் ஆரோக்கியசாமி, வெங்கட்ராஜன் அய்யர் மூலமாக அறிந்துகொண்ட தொண்டர்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். ஷூட்டிங் இல்லாத நாளாக பார்த்து தலைவர் மீட்டிங்கை வைக்க வேண்டியதானே.  மீண்டும் மீண்டும் புஸ்ஸியிடமே நம்மை நிற்க வைக்கிறாரே என்று புலம்பித்தவித்து வருகின்றனர்.

விஜய்க்கு ஷூட்டிங் இருப்பது கூட தெரியாமல் எப்படி மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்யுறார் புஸ்ஸி ஆனந்த்? விஜய் கலந்துகொள்ளக்கூடாது என்பதற்காகவே இது மாதிரி எல்லாம் செய்கிறார் புஸ்ஸி. கட் அவுட் விவகாரம் உள்பட தொடர்ந்து இது மாதிரியே தலைவரை முன்னிலைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார் புஸ்ஸி. இது தெரிந்தேதான் தனக்கு பனையூர் அரசியல் செய்வற்கு வசதியாக இருக்கிறது என்று விட்டுக் கொடுக்கிறாரா விஜய்? என்று சந்தேக கேள்விகளை எழுப்புகின்றனர் தவெகவினர்.

இதையும் படிங்க: ஆடியோ லீக் விவகாரம்; மாவட்ட நிர்வாகிகளிடம் உண்மையை உடைத்துக் கூறிய புஸ்ஸி ஆனந்த்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share