×
 

மகளிர் உரிமைத்தொகை இரு மடங்காக உயர்கிறதா? ஜூன் மாதத்திற்கு மேல் அறிவிப்பு? இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி

தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் இந்த முடிவை ஜூன் மாதத்திற்கு மேல் அமல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 நடந்த பொழுது மக்கள் நீதி மையம் சில தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து களத்திற்கு வந்தது. அதில் முக்கியமானது மகளிர் உரிமை துறையாக 1500 ரூபாய் தருகிறோம் என்பதாகும். அந்த நேரத்தில் திமுகவும் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இதனால் கோபம் அடைந்த மக்கள் நீதி மையம் எங்களுடைய கோரிக்கையை காப்பியடித்து விட்டார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டியது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்ற வில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு.

அதில் முக்கியமானது இலவச லேப்டாப், கல்வி கடன் ரத்து, மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூல், கேஸ் சிலிண்டர் மானியம் உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகள் உண்டு. இதில் முக்கியமானதாக இருந்தது மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் தரப்படும் என்பது. இந்த பணத்தை தரவில்லை என்று தேர்தலில் திமுக ஜெயித்து வந்ததிலிருந்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. தேர்தல் வாக்குறுதிகள் முக்கியமாக மகளிர் உரிமைத் தொகையை திமுக அளிக்காதது பொது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி வந்த நேரத்தில் திடீரென திமுக கடந்த ஆண்டு மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் அளிப்பதாக அறிவித்தது. 

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அலை வீசுகிறது... அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி கணிப்பு..!

ஆளுங்கட்சிக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகளை இந்த அறிவிப்பு பின்னுக்கு தள்ளியது. தொடர்ந்து மகளிர் உதவி தொகை வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தது. குடும்ப அட்டை இருக்கும் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை என்று முதலில் அறிவித்திருந்த திமுக, பின்னர் தகுதி உள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை என்று மாற்றியது. இதனால் இரண்டே கால் கோடி குடும்ப அட்டைதாரர்கள் வரவேண்டிய மகளிர் உரிமைச் தொகை  ஒரு கோடியே 50 லட்சம் மகளிர் மட்டும் பயனர் என்றானது. அதன் பின்னர் தவறாக தேர்வு செய்யப்பட்ட பலரை இந்த பட்டியலில் இருந்து நீக்கினர்.

இதனிடையே மக்களவைத் தேர்தலின் நேரத்தில் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என்று மீண்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அறிவித்தனர். ஆனாலும் மகளிர் உரிமைத்தொகை  இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள் வழங்கும் திட்டத்தினால் திமுகவின் மரியாதை பெண்கள் மத்தியில் கூடியது. அது வாக்குகளாக மாறும் என்று கூறி வருகின்றனர்.

சமீபத்தில் வியூக வகுப்பாளர் ராபின்ஷர்மா திமுகவில் பணியாற்ற ஒப்பந்தம் போடப்பட்டதாக தகவல் வெளியானது. அவர் ஏற்கனவே தன்னுடைய ஷோ டைம் மூலம் ஆந்திரா, மகாராஷ்டிரா தேர்தலில் பணியாற்றி வெற்றிகரமாக தேர்தலில் முடித்துக் கொடுத்தவர். அதில் முக்கியமானது ஷிண்டே முதல்வராக செயல்பட்ட பொழுது அவருக்கு வியூக வகுப்பாளராக அமர்த்தப்பட்ட ராபின் சர்மா பேட்டி பெகன் என்கிற திட்ட மூலம் கடந்த தீபாவளி நேரத்தில் ரூ.7500 பெண்களுக்கான போனஸ் வாங்குவதற்கு காரணமாக இருந்தார். இது தவிர மகளிர் உரிமைத்தொகை 2500 ரூபாய் வரை உயர்த்தி வழங்கப்படும் என்கிற அறிவிப்பும் மகாராஷ்டிரா தேர்தலில் பெரிதாக எதிரொலித்தது.

அதன் பின்னர் தமிழகத்தில் திமுகவுடன் அவர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது. அவர் ஒப்பந்தம் போடும்போது மகளிர் உரிமைத்தொகை விவகாரத்தில் அரசு வேறு மாதிரி முடிவு எடுக்கும் என்று கூறப்பட்டது. அதேபோல் ஜனவரி மாத கடைசி பொங்கல் நேரத்தில் மகளிர்க்கு ரூ.5000 வரை போனஸ் வழங்கப்படலாம் என்றும், இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு மேல் மகளிர் உரிமைத்தொகை கூடுதலாக ஆயிரம் சேர்த்து இரட்டிப்பாக்கி வழங்கப்படலாம் என்று தலைமைச் செயலக வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியும், திமுகவுக்கு அது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்தியும் ஆகும். 

இதையும் படிங்க: விஜய்க்கு அந்த அளவுக்கு சீன் இல்ல.... தெறிக்க விட்ட திமுக அமைச்சர் ஐ பெரியசாமி ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share