திமுக,அதிமுகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் கார்கொடிகள்.!! மொத்தமாக அகற்றப்படுமா??
சுயலாபத்துக்காக கட்சியில் உறுப்பினராக இல்லாவிட்டாலும்கூட கட்சி கொடியை தவறாக பயன்படுத்தும் தொடர் சம்பவங்களுக்கு பிரதான கட்சிகள் முற்றுப்புள்ளி வைப்பார்களா?..
உலகத்திலேயே குட்டி நானோ கார்ல கூட கொடி கட்டி பறக்க விட்டு கெத்தா போறது நம்ம தமிழ்நாட்டில மட்டும் தான் இருக்க முடியும் என்கின்றனர் உலகம் சுற்றி வந்த பலர் . அந்த அளவுக்கு சிறிய கார் முதல் 10 பேர் செல்லக்கூடிய பெரிய கார் வரை பெரும்பாலான கார்களில் கட்சி கொடிகள் பறப்பதை நாம் பார்க்கலாம்.
குறிப்பாக இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக விசிக தவெக என பாரபட்சம் இல்லாமல் அனைத்துக் கட்சி கொடிகளும் ஜெகஜோதியாக பறக்கும். முதலில் கட்சித் தலைவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்த கொடிகள் கட்சி தொண்டர்கள் முதல் கட்சியில் இல்லாதவர்கள் வரை பறக்க விட்டு சீன் போட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் டோல்கேட்டுகள் எனப்படும் சுங்கச்சாவடிகளில் பணம் கொடுக்காமல் தப்பிப்பதற்கும், மாநாடுகள் நடைபெறும் போது நேரடியாக கார் பார்க்கிங்கில் நிறுத்தவும், ஷாப்பிங் செல்லும் போது கார் பார்க்கங்களில் டிராபிக் போலீஸ் தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்கும் பலர் இந்த கொடிகளை துஷ்பிரயோகம் செய்வதும் பல இடங்களில் நடைபெற்று உள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்குமா ஆம் ஆத்மி? கடும் போட்டியில் பாஜக - காங்கிரஸ்
கட்சிக் கொடிகளை காரில் கட்டிக்கொண்டு பறக்கும் போது கட்சிக்கான விளம்பரம் மற்றும் கட்சியை உயிர்ப்போடு வைப்பதற்கு இது பயன்படும் என்றாலும், தவறாக பயன்படுத்தும் நோக்கம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம்.
இந்த துஷ்பிரயோகத்தின் ஒரு பகுதியாக ஒரு பகுதியாக இ.சி. ஆர் சாலையில் சில பெண்கள் வெளியிட்ட வீடியோவில் திமுக கொடி கட்டி வேகமாக சென்ற கார் குறித்த வீடியோவும் அடங்கும். இதேபோன்று அதிமுகவினரும் சிலர் சிக்கி உள்ளனர். யாரோ சிலர் தங்களது சுயலாபத்துக்காக கட்சியில் உறுப்பினராக இல்லாவிட்டால் கூட கட்சி கொடியை தவறாக பயன்படுத்தும் இந்த தொடர் சம்பவங்களுக்கு பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் முற்றுப்புள்ளி வைப்பார்களா?..
ஏற்கனவே பொது இடங்கள் நகராட்சி, ஊராட்சி,மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை உடனடியாக மூன்று மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: கூட்டணி ஆட்சி தான்.! வீடு வீடா போங்க.. மீண்டும் உறுதி செய்த த.வெ.க விஜய்!