×
 

தமிழகத்தில் மக்களாட்சியை கொண்டு வர 'ஜனநாயகன்' தேவை.. ஆதவ் அர்ஜூனா தாறுமாறு..!

வயதான தலைவர்களால் இளைஞர்கள் சளிப்படைந்து விட்டனர் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

வயதான தலைவர்களால் இளைஞர்கள் சளிப்படைந்து விட்டனர் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கோவையில் இன்று வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்று பேசினார். "தவெகவுக்கு கட்டமைப்பு இருக்கிறதா, இளைஞர்களை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் என்று நம்மைப் பார்த்து கேட்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று தெரியாது. மக்களின் கட்டமைப்புதான் தவெகவின் கட்டமைப்பு. காங்கிரஸ், திமுக போல தவெகவும் நூறு வருட கட்சியாக உருவெடுக்க போகும் நாள்தான் இன்று.



தற்போது உள்ள ஜனநாயக விரோத ஆட்சி செய்யும் தவறுகளைத் தாண்டி மக்களுக்கு 75 ஆண்டுகளாகத் தீராத பிரச்சினை உள்ளது. அவற்றை உங்கள் மூலம் உள்வாங்கவும் ஒரு கட்டமைப்பை உருவாக்கவும் நாம் இங்கு கூடி உள்ளோம். தமிழக வெற்றி கழகத்தில் அனைவரும் 30 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்கள். 1967, 1977ஆம் ஆண்டுகளில் இதே இளைஞர்களால்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 1977இல் மக்கள் விரோத ஆட்சியை எம்ஜிஆர் தூக்கி எறிந்தார். இன்று மக்கள் ஆட்சியை கொண்டுவர ஜனநாயகன் தேவைப்படுகிறார்.



இந்தி எதிர்ப்பு போராட்ட புரட்சியை முன்னெடுத்தவர்கள் இளைஞர்கள்தான். அப்படி ஒரு புரட்சியை இப்போது தமிழக வெற்றி கழகம் உருவாக்கிக் கொண்டுள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டமோ மாநாடோ நடத்தினால் மக்களை பணம் கொடுத்து அழைத்து வரும் நடைமுறைதான் உள்ளது. ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கூட்டத்திற்கு 100% கட்சியினர் வருகை தந்துள்ளனர். முன் எப்போதும் இல்லாத இளைஞர்கள் எழுச்சியை தமிழக வெற்றி கழகத்தில் பார்க்கிறேன்.

இதையும் படிங்க: தமிழக வெற்றிக் கழகத்தின் டார்க்கெட் என்ன? - கோவை மீட்டிங்கில் விஜய் சொன்ன விஷயம்!



மற்ற கட்சிகளில் எல்லாம் 40 ஆண்டுகளாக ஒரே மாவட்ட செயலாளர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இளைஞரணி செயலாளராக இருப்பார்கள். வயதான தலைவர்களால் இளைஞர்கள் சளிப்படைந்து விட்டனர். ஊழல் ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள். 30 ஆண்டுகளாக ஊழல் பண்ணதால்தான் ரெய்டு வருகிறது. ரெய்டுக்கு நீங்கள் பயப்படும் நேரத்தில் நாங்கள் மக்கள் ஆதரவை பெறுகிறோம்" என்று ஆதவர் அர்ஜுனா கூறினார்.

இதையும் படிங்க: இனிமே அதெல்லாம் நடக்காது... தவெக பூத் கமிட்டி கூட்டத்தில் கர்ஜித்த விஜய்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share