×
 

திமுகவிற்கு காளியம்மாள் போட்ட கன்டிஷன்... பரபரக்கும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை...!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலக உள்ளதாக முடிவெடுத்துள்ள காளியம்மாள் திமுகவில் இணைவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் விலக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர் திமுகவில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. நாகையில் அடுத்த மாதத்தில் உறவுகள் சங்கமம் என்ற நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காளியம்மாள் வாழ்த்துரை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான அழைப்புதழில் காளியம்மானின் பெயருக்கு கீழே சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது அவர் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். ஆனால் கட்சிப் பொறுப்பை அழைப்பிதழில் குறிப்பிடாததால் அவர் கட்சியிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

இதுதொடர்பான அறிவிப்பை காளியம்மாள் விரைவில் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. கட்சியிலிருந்து வெளியேறிய பின்னர் சில மாதங்கள் சமூக செயற்பாட்டாளராக செயல்பட அவர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் திமுகவில் இணைவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தனது தரப்பில் இருந்து காளியம்மாள் சில கோரிக்கைகளை திமுகவிற்கு வைத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.  இந்நிலையில் கட்சியிலிருந்து விலகுவது தொடர்பாக நேரம் வரும்போது கூறுவேன் எனத் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: மேடையிலேயே சீண்டிய சீமான்... ஒரேடியாய் ஒதுங்கிய காளியம்மாள் - கட்சித் தாவலுக்கு காரணம் இதுவா? 

 மற்றொருபுறம் நாம் தமிழர் கட்சியின் உடைய களையுதிர் காலம் என்றும், யார் வேண்டுமானாலும் கட்சியை விட்டு விலக சுதந்திரம் இருப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அதேபோல் கட்சியை விட்டு வெளியே போனால் நீங்க எல்லாம் பேட்டி எடுத்து போடுவீர்கள் என்பதற்காகவே, நான் கட்சியை விட்டு விலகுகிறேன் என பேசுகிறார்கள்.  தொடர்ந்து பேசிய அவர், முதல்ல சமூக செயற்பாட்டாளர் தான் தங்கச்சி இருந்தாங்க அவங்களை அழைச்சிட்டு வந்தது நான்தான். இன்னைக்கு வந்து அவங்களுக்கு  எல்லா சுதந்திரம் இருக்கு வரும்போது வாங்க வாங்க வணக்கம் ரொம்ப நன்றின்னு சொல்லுவோம். போறதா இருந்தா போங்க ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்னு சொல்லுவோம். இதுதான் எங்களுடைய கொள்கை பேசியது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: வேங்கையன் ஒத்தையில தான் வருவான்...! எவ்வளவு பேர் விலகினாலும் கெத்து காட்டும் சீமான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share