×
 

இன்னும் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறாரே இந்த ஆளுநர்.. ஆர்.என். ரவி மீது ஜோதிமணி தாக்கு.!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு சட்ட திருத்தம், சட்டத்துக்குப் புறம்பான ஒன்று

அரசியல் சாசனத்தை மதிக்கும் ஆளுநராக இருந்தால் இந்நேரம் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்திருப்பார் என்று கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஜோதிமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஒன்றியம் வாரியாக நூலகங்களுடன் இணைந்து, பொது தேர்வுகளுக்கான அறிவு சார் மையம் தொடங்கப்பட உள்ளது. பள்ளிகளுக்கு அடுத்தபடியாக அரசு மருத்துவமனை தேவைகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறேன். எனது தொகுதியில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து, துவக்க, நடுநிலைப்பள்ளிகளும் விரைவில் மாற்றப்படும்.



மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு சட்ட திருத்தம், சட்டத்துக்குப் புறம்பான ஒன்று ஆகும். இன்னும் சொல்லப்போனால் அரசியல் சாசனத்துக்கே எதிரானது. தமிழக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இத்தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பாகும். அரசியல் சாசனத்தை மதிக்கும் ஆளுநராக இருந்தால் இந்நேரம் ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் ராஜினாமா செய்யாமல் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆளுநராகதான் ரவி உள்ளார். அதற்காக நான் வருந்துகிறேன்,'' என்று ஜோதிமணி தெரிவித்தார்.

இதையும் படிங்க: பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம்.. தனிநீதிபதியின் தீர்ப்புக்கு தடைவித்த உயர்நீதிமன்றம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share