×
 

பாஜவுக்கு வாழ்த்துகள்.. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.. அரவிந்த் கேஜ்ரிவால் உருக்கம்

பாஜவுக்கு வாழ்த்துகள், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு வாழ்த்துகள், மக்களுக்கு அவர்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியை ஆண்ட ஆம் ஆத்மி கட்சி, பாஜகவிடம் ஆட்சியை இழக்கும் சூழலி்ல் இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கேஜ்ரிவால், பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவிடம் 4089 வாக்குகல் வித்தியாச்தில் தோல்வி அடைந்தார்.

பாஜக தற்போது 11 தொகுதிகளில் வெற்றி பெற்று 37 தொகுதிகளில் முன்னிலையுடன் பெரும்பான்மையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் 27 ஆண்டுகளுக்குப்பின் பாஜக டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. 

இதையும் படிங்க: மதுபானத்தில்தான் கவனம்: அரவிந்த் கேஜ்ரிவாலை விளாசிய அன்னா ஹசாரே 

தேர்தல் தோல்வி குறித்து ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் வீடியோவில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் “ டெல்லி தேர்தல் முடிவுகளை, மக்கள் அளித்த தீர்ப்பை நாங்கள் மிகுந்த பணிவுடன் ஏற்கிறோம். தேர்தலில் வென்ற பாஜகவுக்கு எங்களின் வாழ்த்துகள். தேர்தலில் உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்.

டெல்லியில் இனிமேல் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக ஆம்ஆத்மி செயல்படும், தொடர்ந்து டெல்லி மக்களின் நலனுக்காகச் செயல்படும். டெல்லியில் மக்களின் உடல்நலன், சுகாதாரம், கல்வி,உள்கட்டமைப்பு என கடந்த 10 ஆண்டுகளாக ஏராளமான சேவைகள் செய்துள்ளோம். எதிர்க்கட்சியாக மட்டும் நாங்கள் செயல்படமாட்டோம், மக்களில் ஒருவராக இருந்து, தொடர்ந்து எங்களின் சேவையைத் தொடர்வோம்” எனத் தெரிவித்தார்.

டெல்லி தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில் “ மக்களின் சக்திதான் உச்சபட்சம். வளர்ச்சிப் பணிகள் வெல்லும், நல்ல நிர்வாகம் வெற்றிபெறும். இதுபோன்ற மாபெரும் வெற்றியை டெல்லியில் பாஜகவுக்கு அளித்தமைக்காக என் அன்புக்குரிய சகோதர, சகோதரிகளுக்கு நான் தலைவணங்குகிறேன். உங்கள் ஆசிகளை நாங்கள் மரியாதையுடனும், பணிவுடனும் ஏற்கிறோம். டெல்லி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, டெல்லி என்பது விக்சித் பாரத்தின் முக்கியப் பங்காக மாற்றுவதில் நாங்கள் உறுதி செய்வோம்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே டெல்லியின் முதல்வராக இருந்த ஆதிசி, தான்போட்டியிட்ட கல்காஜி தொகுதியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரியை 900 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
அரவிந்த் கேஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, சவுரவ் பரத்வாஜ் ஆகியோர் தோல்வி அடைந்தநிலையில், கல்காஜி தொகுதியில் ஆதிசி வென்றுள்ளார். 

வெற்றிக்குப்பின் ஆதிசி நிருபர்களிடம் பேசுகையில் “ கல்காஜி தொகுதி மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். எனக்கு பாகுபலி போன்று பணியாற்றிய என் குழுவுக்கும் நன்றி. மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம். நான் வெற்றி பெற்றாலும், இதைக் கொண்டாட சரியான நேரம் இதுவல். பாஜ சர்வாதிகாரத்துக்கும், மோசடித்தனத்துக்கும் எதிரான எங்களின் போர் தொடரும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெண்ணுக்குத் தவறு செய்தால் கடவுள் நிச்சயம் தண்டிப்பார்..! கேஜ்ரிவால் குறித்து சுவாதி மாலிவால் பேட்டி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share