×
 

போதை பழக்கி சீரழித்த கயவன்.. 5 ஆண்டுகளாக தொடர்ந்த பாலியல் கொடுமை.. கேரள மாணவியின் கண்ணீர் கதை..!

கேரளாவில் +1 மாணவிக்கு போதை மருந்து கொடுத்து பழக்கி 5 ஆண்டுகளாக சீரழித்த கயவன் குறித்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காமுகனை போக்சோவில் கைது செய்த போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வெங்கரசேரூர் பகுதியை சேர்ந்த இளைஞன் அப்துல் கபூர். (வயது23).  விதவிதமாக போட்டோ எடுத்து, அதை ஷோசியல் மீடியாக்களில் பதிவிட்டு கன்னி பெண்களுக்கு வலை விரித்து வந்துள்ளான். அந்த நேரத்தில் இவனுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக கோட்டக்கல் பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னை வசதி படைத்த பணக்காரன் போல அப்துல் கபூர் காட்டிக் கொண்டதால், அப்துல் கபூருடன் அந்த மாணவி நெருங்கி பழகி வந்துள்ளார்.

மேலும் அப்துல் கபூர் ஷோசியல் மீடியாக்களில் பதிவிடும் போட்டோக்களை பார்த்து, தன்னையும் அங்கெல்லாம் அழைத்து செல்லலாமே என ஆசையில் கேட்டுள்ளார். அதனை பயன்படுத்திக் கொண்ட அப்துல் கபூர், மாணவியை பல பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

காலையில் சென்று மாலையில் திரும்புவது, பள்ளி வகுப்பை கட் அடிப்பது என இவர்களது பழக்கம் துவங்கி இருக்கிறது. பின்பு அது நாளடைவில் இரவு ஒட்டலில் அறை எடுத்து தங்குவது வரை வளர்ந்துள்ளது. அவ்வாறு ஓட்டலில் தங்கியிருந்த போது மாணவிக்கு உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்திருக்கிறான் இந்த அப்துல் கபூர். கொஞ்சம் கொஞ்சமாக மாணவியை போதைக்கு அடிமையாக்கி சீரழிக்க திட்டமிட்டுள்ளான். அப்துல் கபூரின் இந்த நயவஞ்சக எண்ணம் புரியாமல், அந்த மாணவி போதை பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார். அதனை பயன்படுத்தி பல்வேறு இடங்களுக்கு மாணவியை அழைத்துச் சென்ற அப்துல்கபூர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழகமே பேரதிர்ச்சி... 3 வயது குழந்தையை சிதைத்த 17 வயது காமுகன்... செங்கலால் அடித்ததில் உயிருக்கு போராட்டம்...! 

அத்துடன் தனது குரூரத்தை அப்துல்கபூர் நிறுத்திக்கொள்ளவில்லை. தன்னுடன் அந்தரங்கமாக இர்நுத சமயத்தில், அந்த நேரத்தில் மாணவியை நிர்வாணமாக வீடியோவும் எடுத்திருக்கிறான் அப்துல்கபூர். இது இன்று நேற்று என்று இல்லாமல், மாணவி பிளஸ்-1 படித்த கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து தற்போது வரையிலான 5 ஆண்டுகளாக தொடர்ந்துள்ளது. இந்த 5 ஆண்டுகளில் அந்த மாணவி முழுமையாக போதைக்கு அடிமை ஆகி உள்ளார். தனது திட்டத்தில் அப்துல் கபூர் முழுதாக வெற்றியும் பெற்று, 5 ஆண்டுகளாக பலமுறை அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். 


இந்தநிலையில் தங்கள் மகள், எப்படியோ போதைக்கு அடிமையாகி விட்டாலே என கண்ணீர் வடித்த அவரது பெற்றோர், போதையில் இருந்து விடுபட சிகிச்சை அளிக்க துவங்கினர். போதை பழக்கத்தில் இருந்து விடுபட சிகிச்சையில் இருந்தபோது மாணவிக்கு கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டது. அப்போது தான் மாணவி, தன்னை வாலிபர் ஒருவர், கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கி வரும் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார். அதைக்கேட்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த மாணவி, தன்னை அந்த வாலிபர் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்திருப்பதாகவும் கூறி உள்ளார். 

அதனையறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். 5 ஆண்டுகளாக தங்களது மகள் அனுபவித்து வரும் கொடுமை பற்றி கோட்டக்கல் போலீஸ் நியைத்தில் புகார் அளித்து உள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிந்தனர். மாணவிக்கு போதை மருந்து கொடுத்து சீரழித்த அப்துல் கபூர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதியப்பட்டது. அதன்பேரில் அவனை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அப்துல் கபூரின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவியை மட்டும் தான் அப்துல் கபூர் சீரழித்தானா? அல்லது இதுபோல் பல பெண்களின் வாழ்வில் அப்துல் கபூர் விளையாடி உள்ளானா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அடுத்தடுத்து 7 மாணவிகள்... சைல்டு லைனுக்கு பறந்த போன் கால்... 58 வயது சபல ஆசிரியரை தட்டித்தூக்கிய போலீஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share