அய்யோ அம்மா... அமலாக்கத்துறை..! கே.என்.நேருவின் சகோதரார் மருத்துவமனையில் திடீர் அனுமதி..!
இந்த வழக்கில் கைதாகும் முகாந்திரம் இருப்பதால்தான் அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அன்று காரில் முகைத்தை மறைத்துக் கொண்டு சென்றார் ரவிச்சந்திரன்.
கடந்த 3 நாட்களாக ரவிச்சந்திரன் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்நிலையில், அமைச்சர் நேருவின் சகோதரர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று விசாரணைக்கு ஆஜராகும் படி ரவிச்சந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் தொடர்புடைய சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த ஏப்.7-ம் தேதி சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் 2-வது நாளாக சோதனை நடந்தது.
இந்நிலையில், அமைச்சர் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணைக்காக ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு 3 நாட்களுக்கு முன் அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மீண்டும், கே.என்.ரவிச்சந்திரனை ஆர்.ஏ.புரம் 3-வது குறுக்குத் தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து சென்று 3-வது நாளாக நேற்று முன் தினம் சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க: ஜெகஜ்ஜால கில்லாடிகள்... கே.என்.நேருவின் சகோதரரும் மகனும் இப்படித்தான் மோசடி செய்தார்களா..? ED-யிடம் சிக்கிய ஆதாரங்கள்..!
அதேபோல், ஆர்.ஏ.புரம் கிருஷ்ணாபுரி முதல் தெரு, பிஷப் கார்டனில் உள்ள அவரது நிறுவனம், அடையாறில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட மூன்று இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், அவர் நடத்தும் நிறுவனத்தின் பங்குதாரரான தீபக் என்பவரை ரவிச்சந்திரன் வீட்டுக்கு அழைத்து வந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ரவிச்சந்திரனை மீண்டும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக அதிகாரிகள் ஆஜராக அறிவுறுத்தினர். இதையடுத்து, மீண்டும் அவர் நேற்று ஆஜரானார். அவரிடம் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2013ல் ஒரு நிறுவனம் அவர்கள் 30 கோடி ரூபாய் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் வாங்குறார்கள்.
எதற்காக இந்தக் கடன் என்றால் ஒரு 100 மெகாவாட் வின்ட்மில் பிராஜெக்ட் நாங்க திருப்பூரில் திறக்கப்போகிறோம் எனச் சொல்லி கடனை வாங்கி, இந்தக் கடனை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி இருக்கிறார்கள். இது தான் வழக்குடையே சாராம்சம். ஆனால் இதில் முக்கியமாக அந்த பணம் இளையராஜா, இன்னொருவர் பேர் அறிவுநிதி. இவர்கள் இருவரும் அண்ணன் -தம்பி. இவர்கள் இரண்டு பேரும் என்ன செய்திருக்கிறார்கள் என்றால் ட்ரூடாம் ஏபிசி இந்தியா பிரைவெட் லிமிடெட் என்கிற நிறுவனத்தின் மூலம் 30 கோடி ரூபாய் வாங்குகிறார்கள்.
அந்த பணத்தை அப்படியே ஒரு மூன்று நிறுவனங்களுக்கு ட்ராண்ஸ்பர் செய்கிறார்கள். அந்த மூன்றுமே ஷெல் நிறுவனங்களுக்குச் சொந்தமானது. அதனை ஐஓபி வங்கி ட்ரான்ஸ்ஃபர் செய்ததன் மூலம் கண்டுபிடித்து அதன் அடிப்படையில் தான் சிபிஐயில் புகார் அளித்தனர். ஆகையால் இந்த வழக்கில் கைதாகும் முகாந்திரம் இருப்பதால்தான் அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அன்று காரில் முகைத்தை மறைத்துக் கொண்டு சென்றார் ரவிச்சந்திரன். சாட்சியங்களும், ஆதாரங்களும் வலுவாக இருப்பதால் இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து இருந்தும் ரவிச்சந்திரன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கே.என்.நேரு வீட்டில் டாஸ்மாக் பணம்..? சிக்கப்போகும் குறுநில மன்னர்கள்- ED வைத்த டார்கெட்..!