சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஏழு அரக்கர்கள்.. 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
கோவையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மூன்று நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் திடீரென பள்ளிக்கு செல்லாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு இருந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் கூலி வேலை செய்து வருவதனால், பள்ளி படிப்பை நிறுத்தியதற்கான காரணம் குறித்து பெற்றோர் சிறுமியிடம் கேட்டுள்ளனர். அப்போது சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலமாக இரண்டு கல்லூரி மாணவர்கள் சிறுமியிடம் பழகி உள்ளனர். தொடர்ந்து அந்த மாணவர்கள் சிறுமியை ஆசை வார்த்தை கூறி, கோவைப்புதூரில் தங்கி இருந்த அவர்களின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது அந்த இரு மாணவர்களும் அவர்களுடன் அறையில் தங்கி இருந்த மேலும் ஐந்து மாணவர்கள் என ஏழு பேர் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவிக்கவே, பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதனை அடுத்து போலீசார் ஏழு மாணவர்களையும் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நிர்வாண படத்தைக் காட்டி மிரட்டி, இன்ஜினியரிங் மாணவி கூட்டு பலாத்காரம்; 2 மாதங்களாக நீடித்த கொடூரம்; காதலன், நண்பர்களுடன் கைது
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் இன்று இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும் இது குறித்த தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இந்த கொடூரமான குற்றத்தை வன்மையாக கண்டிக்கிறோம் என்று இந்த சம்பவம் குறித்து மூன்று நாட்களுக்குள் தேசிய மகளிர் ஆணையத்திடம் தமிழக டிஜிபி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி பாதிக்கப்பட்ட சிறுமைக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு மேலும் கொடுமை.. வெறும் ரூ.50,000 வழங்கிய ரயில்வே அதிகாரிகள்..