சிறு நீரில் குளியல்... ஷாக் ட்ரீட்மெண்ட்.. சித்திரவதை... ஆன்மாவை உலுக்கும் அமெரிக்காவிலிருந்து திரும்பியவரின் கதை..!
அடர்ந்த இருண்ட காடுகள், மலைகள், பரந்த பெருங்கடல்கள் வழியாக சிறிய படகுகளில் பயணம் செய்து ஆறு மாதங்களில் அமெரிக்காவை அடைந்தேன். இந்த நேரத்தில், ஏஜெண்டுகளின் ஆட்கள் வழியில் எனக்கு (மின்சார) ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தார்கள்.
''அடர்ந்த இருண்ட காடுகள்... பரந்த கடல்கள்… பெரும் சித்திரவதை. 182 நாட்களுக்குப் பிறகு நான் உயிர் பிழைத்ததற்கு நான் நன்றி கூறுகிறேன்...'' ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தைச் சேர்ந்த குஷ்ப்ரீத் தான் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு திரும்பிய கதையை கண்ணீரும், அழுகையுமாக பகிர்ந்துள்ளார்.அவரது பணத்தை ஏஜெண்டுகள் எப்படி அபகரித்தனர்? தனது நம்பிக்கையை எப்படி உடைத்தார்கள் என்பதை அவர் கூறினார். மாஃபியாவிடம் ஒப்படைத்து ஏஜெண்டுகள் எங்கள் உயிரோடு விளையாடியானார்கள் என்கிறார் குஸ்ப்ரீத்.
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியா திரும்பிய அவர் சொல்லும் தகவல்கள் உங்கள் ஆன்மாவை நடுங்க வைக்கும்.''அமெரிக்கா சென்று நிறைய பணம் சம்பாதிப்பது எனது கனவு. அதனால் நான் என் கனவுகளையும் என் குடும்பத்தினரின் கனவுகளையும் நிறைவேற்ற முடியும் என்று நம்பினேன். அதனால் நான் அமெரிக்கா செல்ல முடிவு செய்தேன். இதற்கு ஏஜெண்ட் ஒருவர் எனக்கு ரூ.45 லட்சம் செலவாகும் என்று கூறினார். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. நான் இதை வீட்டில் சொன்னேன். என் கனவுகளை நனவாக்க, குடும்பம் பண்ணை, வீடு, விலங்குகளை விற்றார்கள். கடன் வாங்கினார்கள். பின்னர் அவர்கள் என்னை அமெரிக்காவிற்கு அனுப்பினர். ஆனால் இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை நான் என் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை.
ஏஜெண்ட் என்னை கழுதை பாதை வழியாக அழைத்துச் சென்றார். கழுதை பாதை என்றால் என்னவென்று எனக்கு அப்போது தெரியாது. ஏஜெண்ட் சொன்னபடியே நான் செய்து கொண்டே இருந்தேன். அமெரிக்காவை அடைய எனக்கு ஆறு மாதங்கள் ஆனது. அங்கு சென்றதும், அமெரிக்க போலீசார் என்னை கைது செய்தனர். நான் அங்கே 12 நாட்கள் மட்டுமே தங்கியிருந்தேன். பின்னர் நாடு கடத்தப்பட்டேன். ஆனால் 182 நாட்கள் நான் அனுபவித்த சித்திரவதைகளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். ஏஜெண்ட்டுகளின் வலையில் விழுந்து ஒருபோதும் வெளிநாடு செல்ல வேண்டாம் என்று ஒவ்வொரு இளைஞரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். அது உங்கள் உயிருக்குக் கூட ஆபத்தாக முடியும். நான் உயிருடன் திரும்பிவிட்டேன், இது எனக்கு ஒரு அதிசயம்தான்.
இதையும் படிங்க: அமெரிக்கா செல்ல எச்1பி விசாவை 73 % பெற்ற இந்தியர்கள்: மத்திய அரசு தகவல்
''அடர்ந்த இருண்ட காடுகள், மலைகள், பரந்த பெருங்கடல்கள் வழியாக சிறிய படகுகளில் பயணம் செய்து ஆறு மாதங்களில் அமெரிக்காவை அடைந்தேன். இந்த நேரத்தில், ஏஜெண்டுகளின் ஆட்கள் வழியில் எனக்கு (மின்சார) ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தார்கள். என் மீது சிறுநீரை கழித்தனர். என்னை பல நாட்கள் பசியால் வாட வைத்திருந்தனர். நான் பல நாட்கள் காடுகளில் நடந்தேன். நான் அமெரிக்காவை அடைந்தபோது, 12 நாட்கள் மட்டுமே தங்க முடிந்தது. அங்கிருந்து, ஒரு கடுமையான குற்றவாளியைப் போல கைகளும், கால்களும் சங்கிலிகளால் கட்டப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பி வைத்தனர். அதிர்ஷ்டவசமாக, நான் உயிர் பிழைத்தேன்.
சில நேரங்களில் அவர் காடு வழியாகவும், சில சமயங்களில் கடல் வழியாகவும் என்னை அழைத்துச் சென்றனர். இந்த நேரத்தில் ஏராளமான இளைஞர்களும் மற்றவர்களும் அங்கு இருந்தனர். சிலர் நடக்க முடியாவிட்டால், விழுந்துவிடுவார்கள். ஏஜெண்டின் ஆட்கள் அவர்களை விட்டுவிட்டு மறைந்து விடுவார்கள். எங்கெல்லாம் தண்ணீர் கிடைக்கிறதோ அங்கெல்லாம் குடிப்போம். ஏஜெண்டுகள் பணத்தை மாஃபியாக்களுக்கும் கொடுக்க மாட்டார்கள். இதனால் ஆத்திரம் அடையும் மாஃபியாக்கள் எங்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுப்பார்கள். ஏஜெண்டுகள் தொலைபேசியை எடுக்க மாட்டார்கள், மாஃபியாக்கள் பணம் கேட்பார்கள்'' என அதிர்ச்சியோடு பேசுகிறார் அவர்.
ஹரியானாவிலிருந்து இளைஞர்களை கழுதை பாதை வழியாக அனுப்பிய முகவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற வழக்குகளுக்கு, மாநிலத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழு, அனைத்து மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளது. அத்தகைய ஏஜெண்டுகளின் பட்டியலை உருவாக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது. இதற்கிடையில், குருக்ஷேத்திராவில், அமெரிக்காவிலிருந்து திரும்பிய 14 பேரின் புகார்களும் வியாழக்கிழமையே எடுத்துக்கொள்ளப்பட்டன.
சிறப்பு புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சிபாஸ் கவிராஜ் எழுதிய கடிதத்தின்படி, இளைஞர்கள் திரும்பி வந்த மாவட்டங்களில், உள்ளூர் காவல்துறையினர் இளைஞர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் புகார்களைப் பெறுவார்கள். இதன் பிறகு, அவர்களை அனுப்பிய அனைத்து ஏஜெண்டுகள் மீதும் சதித்திட்டத்தின் கீழ் மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கழுதை பாதை வழியாக வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அவர்களின் பெயர்களும் காவல் பதிவேடுகளில் சேர்க்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் பயண ஏஜெண்டுகளின் பதிவு சரிபார்க்கப்படும். பயண நிறுவனங்களின் ஊழியர்களின் பதிவுகள், நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் அவர்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் சிலரின் பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்வார்கள்.ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், பயண முகவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நாடு கடத்தல் புதிதல்ல! 15 ஆண்டுகளாகத் தொடர்கிறது: எண்ணிக்கையை வெளியிட்ட மத்திய அரசு