×
 

எம்புரான் பட தயாரிப்பாளர் வீட்டில் திடீர் ரெய்டு... பரபரப்பு பின்னணி..!

ஸ்ரீ கோகுலம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் சினிமா தயாரிப்பாளருமான கோகுலம் கோபாலன் வீட்டில் அமலாக்கத்துறையானது சோதனை நடத்தி வருகின்றனர். 

இன்று காலை முதல் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பிரபல நிதி நிறுவனமான கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கொச்சியிலிருந்து வந்த அமலாக்கத்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில்  இருக்கக்கூடிய நிறுவனத்தினுடைய நிறுவனர் கோகுலம் கோபாலன் வீட்டிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.

அந்த  வீட்டில் அவருடைய மகனும் இந்த நிறுவனத்தினுடைய நிர்வாகிகளில் ஒருவருமான பைஜு கோபாலும்  வந்து வசித்து வருகின்றனர். இன்று நண்பகல் 12 மணியிலிருந்து ஆறு பேர் கொண்ட அமலாக்கத்துறைஅதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: சட்டப்பேரவையில் வெடித்த எம்புரான் பட சர்ச்சை.. முதல்வர் சொன்ன விஷயம் இதுதான்..!

சமீபத்தில வெளியான எம்புரான் திரைப்படத்தினுடைய தயாரிப்பாளர் கோகுலன் கோபாலன் அது மட்டுமில்லாமல் மஞ்சுமல் பாய்ஸ் உள்ளிட்ட மலையாள திரையுலகின் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார். லியோ உட்பட பல தமிழ் திரைப்படங்களை வந்து கேரளாவில் வந்து வெளியீட்டு தொழிலையும் வந்து இவருடைய நிறுவனம் இந்த கோகுலம் சினிமா என்ற நிறுவனம் மூலமாக வெளியிட்டுருக்கிறார்கள். சமீப ஆண்டுகளாக சினிமாத்துறையில் இவர்களுடைய நிறுவனத்தினுடைய முதலீடு அதிகமாக இருக்கக்கூடிய நிலையில் அதில் ஏதும் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்திருக்கிறதா? என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டு வருவதாக அமலாக்கு துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

அதே போன்று எற்கனவேவருமான வரித்துறை நடத்திய சோதனை அதில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையிலும், இந்த சோதனையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக  வழக்கை வந்து பதிவு செய்து சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழின வெறுப்போடுதான் இருப்பீங்களா.? 'எம்புரான்' படக் குழுவை வெளுத்து வாங்கிய வேல்முருகன்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share