நிலத்தை அபகரிப்பு..? அரிவாள் மனையைக் காட்டி கொலை மிரட்டல்.. திமுக MLA பிரபாகர் ராஜா மீது பகீர் புகார்.!
திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜாவின் உதவியாளர் சூரிய சிவகுமார் தலைமையில் சுமார் 30க்கும் மேற்பட்ட அடியாட்கள் வக்கீல் போல் உடை அணிந்து கொண்டு சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
அதிகாரத்தை கையில் வைத்து மிரட்டல் விடுத்து, இடத்தை வளைத்து போட முயன்றதாக திமுக எம்.எல்.ஏ., பிரபாகர் ராஜா மீது எழுந்திருக்கும் புகார் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை, வடபழனி, குமரன் காலனியை சேர்ந்த ஜனார்த்தனனுக்கு சொந்தமான 1800 சதுர அடி நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை பால்துரை என்பவர் கடந்த 23ஆம் ஆண்டு 16 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இடையில் ஜனார்த்தனன் வயது முதிர்வு காரணமாக இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
தற்போது அந்த நிலம் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ளது என்ற நிலையில் நிலத்தின் உரிமையாளர் ஜனார்த்தனன் இறந்துவிட்டது தெரிந்து அந்த நிலத்தை அபகரிக்க முயன்றதாக விருகம்பாக்கம் திமுக எம்.எல்.ஏ., பிரபாகர்ராஜா தரப்பினர் மீது பகிரங்க புகார் அளித்துள்ளது. அந்த இடத்தில் கேண்டில் வைத்து நடத்தி வரும் வாழ்த்துறையை காலி செய்ய சொல்லி எம்.எல்.ஏ., பிரபாகர் ராஜாவின் உதவியாளர் சூரிய சிவகுமார் குடைச்சல் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்.? துணை முதல்வர் உதயநிதி மெசேஜ்.!
முதலில் நில உரிமையாளர் ஜனார்த்தனன் என போலி ஜனார்த்தனன் ஒருவரை எம்எல்ஏ உதவியாளர் சூர்யா செல்வகுமார் அவரை வைத்து நிலத்தை அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் நிலத்தை குத்தகைக்கு எடுத்த பால்துரை நீதிமன்றத்தை நாடிய நிலையில் தற்போது மிரட்டலை கையில் எடுத்து அச்சுறுத்தி முயற்சிப்பதாக குற்றச்சாட்டு கிளம்பி உள்ளது. நிலத்தை காலி செய்ய மறுப்பதால் குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு ஆகியவற்றை துண்டிக்க வைத்ததாக குற்றச்சாட்டும் கிளப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜாவின் உதவியாளர் சூரிய சிவகுமார் தலைமையில் சுமார் 30க்கும் மேற்பட்ட அடியாட்கள் வக்கீல் போல் உடை அணிந்து கொண்டு சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
ஜேசிபியை அழைத்துச் சென்று அந்த இடத்திலிருந்து செட்டை தரை மட்டமாக்கியதோடு பொருட்களை அள்ளி வீசிய அராஜகத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அத்துமீறி இடத்திற்குள் புகுந்து இடத்திலிருந்த உடைமைகளை சேதப்படுத்தியதாகவும் தட்டிக்கேட்ட குத்தகைக்காரர் பால்துரையை அரிவாள்மனையை வைத்து வெட்ட முயற்சித்ததும் அதிர்ச்சியைக் கிளப்பி உள்ளது.
சூரிய சிவகுமார் திமுகவில் வட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து கொண்டு எம்எல்ஏ பிரபாகராஜாவுக்கு வலதுகரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நில அபகரிப்பு முயற்சிக்கு பின்னணியில் எம்எல்ஏ பிரபாகராஜாவின் தலையீடுதான் முழுக்க முழுக்க இருப்பதாக கூறப்படுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தை அபகரிக்கும் முயற்சியை எம்எல்ஏ பிரபாகர் ராஜாவிடம் முறையிட்டபோது, தன்னிடம் லட்சக்கணக்கில் கட்டு கட்டாக பணம் கேட்டு பேரம் பேசியதாக கூறிய குத்தகைக்காரர் பால்துரை, இந்த சம்பவம் குறித்து பலமுறை போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நீதிமன்றம் சென்று தீர்வு வாங்கிக் கொள்ளுமாறு எழுதி வாங்கிக் கொண்டு அம்போவென கைவிட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
அடியாயாட்களை அழைத்துச் சென்று, அத்துமீறி ஜேசிபி வைத்து இடித்து தள்ளி, அராஜகத்தில் ஈடுபட்டு, மிரட்டியதாக திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா தரப்பு மீது எழுந்துள்ள புகார் குறித்து ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் இருந்த விருகம்பாக்கம் போலீசார், விஷயம் வெளியே தெரிந்ததும் தற்போது வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆபாசமாக பேசுவது, அத்துமீறி நுழைந்தது பொருள்களை சேதப்படுத்தியது, தகராறு செய்தது என மொத்தமாக ஐந்து பிரிவுகளின் எம்எல்ஏ பிரபாகர் ராஜாவின் உதவியாளர் சூரிய சிவகுமார் அவரது எடுபிடிகள் சீனிவாசன், வக்கீல் வேடத்தில் வந்த அடியாட்கள் 30 பேர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர் விருகம்பாக்கம் போலீஸார்.
இதையும் படிங்க: சிறுபான்மை சகோதரர்கள் உரிமைகளை பாதுகாப்போம்..! உச்சநீதிமன்றத்துக்கு முதலமைச்சர் நன்றி..!