கும்பமேளா சென்றவர்கள் 4 பேர் பலி.. பல முறை பல்டி அடித்த ஜீப் ..
கும்பமேளாவுக்கு சென்று கொண்டிருந்தபோது பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி 13ம் தேதி மகா கும்பமேளா துவக்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா என்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் பிரயாக்ராஜை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கும்பமேளாவில் புனித நீராடினர். இன்னும் பல அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கும்பமேளாவில் நீராடி வருகின்றனர். இதனால் பிரயாக்ராஜ் முழுவதும் மனித தலைகளாகவே தெரிகிறது. கும்பமேளா முடிவுக்கு வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலை மார்க்கமாகவும், ரயில் மூலமாகவும் பிரயாக்ராஜ் நோக்கி மக்கள் குவிந்து கொண்டே உள்ளனர்.
இதையும் படிங்க: பஞ்சாயத்து தலைவர் பதவி FOR SALE..! அக்ரீமெண்ட் போட்டு விற்ற தில்லாலங்கடி பெண் தலைவி
மத்திய பிரதேசத்தின் சிங்க்ரெவுலி மாவட்டத்தில் உள்ள வைதானில் இருந்து 8 பேர் கொண்ட குழு, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவில் கலந்து கொள்ள பொலிரோவில் சென்றனர். இன்று அதிகாலை 2 மணி அளவில் சித்தி மாவட்டத்தில் உள்ள அமஹியா காவல் நிலைய எல்லைக்குட்டப்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 4 பேரை மீட்ட போலீசார் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவிகள்... வாடகைக்கு! 10 நாள் முதல், 1 வருடம் வரை ஒப்பந்தம்; மத்திய பிரதேச கிராமத்தில் விசித்திரம்