சினிமாவில் நடிச்சா அரசியலுக்கு வந்துவிடுவதா.? மதுரை ஆதினத்துக்கு வந்த கோபம்.!!
சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் மதுரை ஆதீனம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலை உள்ளது. என்னை பொறுத்தவரை அப்படிப்பட்ட சூழல் மாற வேண்டும். கடுமையாக உழைத்து, யாரெல்லாம் மக்களுக்காகப் பணியாற்றி இருக்கிறார்களோ, அவர்களே அரசியலுக்கு வர வேண்டும். அப்போதுதான், மக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்து, அவர்கள் மக்கள் மன்றத்தில் பணியாற்றுவார்கள்.
சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு போதும் என நினைக்கிறார்கள். அதனால், நடிகர்கள் பலரும் அரசியலுக்கு வர நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. எனவே, அரசியலுக்கு சினிமா தேவையில்லை. மக்களுக்கு தொண்டு செய்யும் மனநிலைதான் முக்கியம். இதை யாரையும் மனதில் வைத்து குறிப்பிடவில்லை.
இதையும் படிங்க: இந்தி டப்பிங் தேவையா... டென்ஷனான பிரகாஷ் ராஜ்!!
ரம்ஜான் பண்டிகைக்கு தமிழக அரசு மூலம் அரிசி உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அதை அரசு செய்கிறது. அப்படியெனில் ஹிந்து கோயில்களுக்கும் திருவிழாக்களின் போது கூழ் ஊற்றுவதற்கு அரிசி உள்ளிட்ட உதவிகளை அரசு வழங்க வேண்டும். அரசு என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். எனவே, பண்டிகைகளில் மதம் பார்த்து அரசு செயல்படக் கூடாது.
வரும் 2028ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் மகாமக பெருவிழா கொண்டாடப்பட உள்ளது. அந்தப் பெரு விழாவை அரசு மிகப் பெரிய அளவில் முன்னெடுக்க வேண்டும். அதற்கான முன்னேற்பாடுகளை இப்போது இருந்தே அரசு திட்டமிட்டு செய்ய வேண்டும்" என்று மதுரை ஆதினம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காலாவதியான பொருட்கள் விற்பனை..? ஆல்பர்ட் தியேட்டரில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு..