ஓடும் ரயிலில் ஏற முயன்ற ஸ்டேஷன் மாஸ்டர்..! ரயிலில் சிக்கி உயிரிழந்த சோகம்..!
கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் அனுசேசகர் ரயிலில் ஏற முயன்றபோது நிலைதடுமாறி ரயில் இடுக்கில் சிக்கி தண்டவாளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தியா முழுவதும் ஏழை மக்களின் விமான பயணமாக ரயில் பயணங்கள் பார்க்கப்படுகிறது. சவுகரியம் மிக்க பயணம் என்பதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ரயில் பயணங்களையே பெரிதும் விரும்புகின்றனர். இயற்கை எழில்கொஞ்சும் காட்சிகளையும், அழகான பாலங்களையும், சுரங்கங்களையும் கடந்து செல்வதால் பெரும்பாலன மக்களின் விருப்ப பயணமாக ரயில் பயணம் அமைந்து விடுகிறது. எனினும் ரயில் பயணத்தில் பலர் விபத்துகளில் சிக்குவதும் தொடர்கிறது. பலர் ரயில் படிகட்டுகளில் பயணித்து விபத்துகளில் சிக்குகின்றனர். சிலர் ரயில் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து காயமடைகின்றனர். இன்னும் சிலர் ரயிலில் இருந்து இறங்கும் போதும், ஏறும் போதும் நடை மேடைக்கும், ரயிலுக்கும் இடையில் சிக்குகின்றனர். இந்நிலையில் மதுரை கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் ரயில் விபத்தில் இறந்ததது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த அனுசேசகர், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். 32 வயதாகும் இவருக்கு திருமணமாகி 4 மாத கைக்குழந்தை உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக நியமிக்கப்பட்டார். வேலைக்காக அப்பகுதியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து அங்கேயே தங்கி வசித்தபடி வேலைக்கு சென்று வந்தார். மனைவி மற்றும் குடும்பத்தினரை பார்க்க அவ்வப்போது ரயிலில் கேரளாவுக்கு ரயிலில் சென்று வந்தார்.
இதையும் படிங்க: மற்றொரு கோவை ஆகிறதா மதுரை? வணிக கோணத்தில் திருப்பரங்குன்றம் மறியல்...
இன்று காலை வேலை நிமித்தமாக மதுரை செல்ல நினைத்தார் அனுசேகர். அதற்காக காலை 8.30 மணிக்கு கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரசில் ஏறினார். அனைவரும் ஏறும் வரை பொருத்திருந்து என்ஜின் அருகே உள்ள பெட்டியில் ஏற முயன்றபோது ரயில் நகரத் தொடங்கியது. இதனால் நிலைதடுமாறிய அனுசேகர் சற்றும் எதிர்பார்க்காமல் ரயில் இடுக்கில் சிக்கி தண்டவாளத்தில் விழுந்தார். இதில் அவரது பின்னந்தலையில் பலத்த அடி பட்டது. ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் அவர் சிக்கிய நிலையில் ரயில் சக்கரம் தலையில் ஏற சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்த பொதுமக்கள் கத்தி கூட்டலிட்டனர். இதனால் ரயில் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர் ரயில்வே ஊழியர்களும், பொதுமக்களும் அனுசேகரின் உடலை பெரும் சிரமத்துக்கு இடையே மீட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த விருதுநகர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கள்ளிக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாநில அரசின் உறுதிக்கு மத்திய அரசு பணிந்துள்ளது - மு.க.ஸ்டாலின்