இரவில் திருட்டு.. பகலில் உல்லாசம்.. இரும்பு ராடோடு வீதி உலா.. கதிகலங்க வைத்த திருடர்கள் கைது..!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நள்ளிரவில் முகமூடி அணிந்து கையில் இரும்பு கம்பியோடு வனாலய அலுவலகத்திற்குள் இறங்கிய திருடர்கள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வனம் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. திருப்பூர் வனாலய அலுவலக வளாகத்தில் தற்பொழுது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் முகமூடி அணிந்து வந்த திருடர்கள் அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த கேமரா, கட்டுமான பணிக்கு பயன்படுத்தும் பொருட்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வனாலய நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது..
சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் திருடர்கள் முகமூடி அணிந்தபடி அலுவலகத்தை இரும்பு கம்பி மற்றும் கல்லை கொண்டு உடைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன.அவற்றை ஆய்வு செய்த போலீசார் விசாரணையில் இறங்கினர். வழக்கமாக முகமூடி அணிந்து கொள்ளையடிக்கும் கும்பல் குறித்து விசாரித்தனர். அதில் தொடர்பில் கிடைக்காத திருடர்களை போலீசார் விசாரித்து வந்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் வன்கொடுமை வழக்குகள் குறைந்துள்ளன.. புள்ளி விவரங்களைக் காட்டி மு.க.ஸ்டாலின் பேச்சு..!
இந்நிலையில் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சியில் டாக்ஸி கார் ஒன்று இருப்பதை கவனித்த போலீசார் அதுகுறித்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இதையடுத்து கோவையில் உள்ள மதுபான கடையில் வைத்து கைது செய்தனர். மேலும் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய கால் டாக்ஸி காரையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த நடேஷ் குமார் என்பவர் கோவையில் உள்ள தனியார் டாக்ஸி டிரைவராக பணிபுரிந்து வருவது தெரிந்தது.
பகலில் டாக்சி ஓட்டும் நடேஷ்குமார் அதே ஊரை சேர்ந்த பழனிவேல்,ரகுமான், அறிவரசன் மற்றும் சின்னசாமி ஆகியோருடன் இணைந்து திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளார். அதே கும்பல் இந்த திருட்டிலும் ஈடுபட்டுள்ளது. கட்டுமான பணி நடப்பதால் பெரிய அளவில் பாதுகாப்பு இருக்காது. திருடியது யார்னென கண்டுபிடிப்பது சிரமம் என நினைத்து இந்த கும்பல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இரவில் இது போன்ற திருட்டு சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததும், அதில் கிடைக்கும் பொருட்களை பெற்று பகல் நேரங்களில் அந்த பணத்தை வைத்து சுற்றுலா செல்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: எங்களுக்கு போட்டி யாரும் இல்ல..! 2026ல் திமுக தான்.. அமைச்சர் பெரியசாமி நம்பிக்கை..!