×
 

இதை பொறுத்துக்கொள்ள முடியாது... பொங்கியெழுந்த அமைச்சர் அன்பில் மகேஷ் 

சிறுமி தனிமைப்பபடுத்தப்பட்ட சம்பவம் உறுதியானதை தொடர்ந்து சிறுமியை தனிமைப்படுத்த உத்தரவிட்ட பள்ளி முதல்வர் ஆனந்தி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குழந்தைகள் மீதான ஒடுக்கு முறையை எந்த வகையிலும் பொறுத்து கொள்ள முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார் கோவையில் மாதவிடாய் காரணமாக வெளியில் அமர வைக்கப்பட்டு மாணவி தேர்வெழுத வைக்கப்பட்ட விவகாரத்தில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அன்பு மாணவி தனியாக அமரவில்லை நாங்கள் இருக்கிறோம் இருப்போம் என்றும் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுருக்கிறார். 

மாதவிடாய் காரணமாக மாணவி பள்ளிக்கு வெளியில் அதாவது வகுப்பறைக்கு வெளியில் அமர வைக்கப்பட்டு தேர்வெழுத வைக்கப்பட்டார் என்பது பெரும் சர்ச்சையாக இருக்கிறது. இதனால் அந்த பள்ளியினுடைய முதல்வர் ஆனந்தியும் சஸ்பென்ஸ் செய்யப்பட்டிருக்கிறார். இது இல்லாமல் காவல்துறை தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கல்வித்துறை தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்பொழுது பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்புல் மகேஷ் பொய்யாமொழி தனது கருத்தை பதிவிட்டுருக்கிறார். இதில் மாணவர்கள் மீதான ஒடுக்கு முறையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

இதையும் படிங்க: பள்ளி வகுப்பறையில் உல்லாசம்..! சிதறியடித்து ஓடிய மாணவர்கள்..! அன்பிலின் அத்தை ஊரில் அட்டூழியம்..!

தனியார் பள்ளியில் நடந்தது என்ன? 

பொள்ளாச்சியை அடுத்த செங்குட்டை பாளையத்தில் உள்ள சுவாமி சித்பவானந்தா மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பூப்பெய்தி உள்ளார். இதனை அடுத்து முழு ஆண்டு தேர்வு நடப்பதால் பள்ளி நிர்வாகம் மாணவியை தேர்வு எழுத அனுமதித்துள்ளது.இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை நடைபெற்ற தேர்வுகளில் பள்ளி மாணவி தனிமைப்படுத்தப்பட்டு வகுப்பறைக்கு வெளியே அவரை வைத்து தேர்வு எழுத வைக்கப்பட்டுள்ளார்.இது குறித்து அவரது தாயார் வீடியோ பதிவு செய்ததுடன், பள்ளி நிர்வாகத்திடமும் கேட்டுள்ளார். ஆனால் முறையான பதில் கிடைக்கவில்லை.

இது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் குறிப்பிட்ட பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமி தனிமைப்பபடுத்தப்பட்ட சம்பவம் உறுதியானதை தொடர்ந்து சிறுமியை தனிமைப்படுத்த உத்தரவிட்ட பள்ளி முதல்வர் ஆனந்தி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் இது குறித்து பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன்,முதல்வர் ஆனந்தி மற்றும் அலுவலக உதவியாளர் சாந்தி உள்ளிட்ட மூவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


 

இதையும் படிங்க: மரத்தடியில் வகுப்பறை.. ரூ.7,500 கோடி என்னாச்சு..? திமுக அரசை ரவுண்டு கட்டும் அண்ணாமலை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share