டெல்லியில் அலறவிட்டு அனுப்பியிருக்காங்க... அண்ணாமலையை பங்கம் செய்த சேகர் பாபு...!
டெல்லிக்கு போனாரு டெல்லியில் பலமாக அறவிட்டு அனுப்சிருக்காங்க. இங்க வந்த பிறகு அதை மறைக்கிறதுக்கு ஏதாச்சும் இங்க பேசிதான ஆகணும், என்று அண்ணாமலையை விளாசியுள்ளார் அமைச்சர் சேகர்பாபு
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பல கோயில்களில் கருங்கல்லாலான தரைதளங்கள் உள்ள கோயில்களில் கயர்மேட் விரிப்பதற்கு உண்டான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவை தொடர்ந்து ஈரப்பதத்தோடு இருப்பதற்காக தண்ணீர் ஊற்றவும் சொல்லி இருக்கிறோம். பல திருக்கோயில்களில் நீர்மோர் மற்றும் குளிர்ந்த குடிநீர் வழங்குகின்ற பணிகளையும் முடக்கி விட உள்ளோம். தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பிரதமர் 6ம் தேதி பாம்பன் பாலம் திறக்க வருகிறார். இப்ப காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி காட்டுறாங்க அது ஜனநாயக உரிமை என்றார்.
திமுக எந்த முடிவாக இருந்தாலும் ஒரே தலைவர் ஒற்றை தலைவர் திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்த அளவில் தமிழக முதல்வர் தான். அவர்கள் என்ன ஆணையிடுகிறாரோ அவர்கள் ஆணையை ஏற்று சீறிப்பாகின்ற சிப்பாய கூட்டமாக திராவிட முன்னேற்ற கழகம் இருக்கும்.
அமுத கரங்கள் மூலமாக தரமான உணவு வழங்கப்பட்டாலும், ஆதி திராவிட நலத்துறையில விடுதியில் வழங்கக்கூடிய உணவுகள் சுகாதாரமற்றதாக இருக்கிறது என அண்ணாமலை குற்றச்சாட்டியிருக்கிறார் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, அவர் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார். டெல்லிக்கு போனாரு டெல்லில் பலமாக அறவிட்டு அனுச்சிருக்காங்க. இங்க வந்த பிறகு அதை மறைக்கிறதுக்கு ஏதாச்சும் இங்க பேசிதான ஆகணும்.
இதையும் படிங்க: தூக்கி வீசிட்டு போய்ட்டே இருப்பேன்... அமித் ஷாவுடன் மல்லுக்கட்டும் அண்ணாமலை...!
அண்ணாமலையை வரச்சொல்லுங்கள், ஏதாவது ஆதிதிராவிடர் விடுதிகளில் உணவு தரமில்லை என்றால் அவர் சொல்லுவதை ஏற்றுக்கொண்டு ஆய்வுக்கு செல்லலாம். அப்படி இருந்தால் நிச்சயமாக வருத்தம் தெரிவித்துக்கொண்டு, அடுத்தடுத்து அந்த குறைகளையும் சரி செய்ய இந்த அரசு தயாராக இருக்கிறது. குறைகளே சொல்லக்கூடாது என்பதல்ல குறைகளை கூட குற்றச்சாட்டுகளாக மாற்றுகின்ற போதுதான் நாங்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
ஆகவே அவர் கூறிய கருத்தை ஏற்றுக்கொண்டு உடனடியாக, ஆதி திராவிட நலத்துறையின் சார்பில் செயல்படுகிறோம். எங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட நான் அமைச்சராக இருக்கின்ற பள்ளிகளில் ஆய்வினை மேற்கொள்கிறேன். அப்படி ஏதாவது இருந்தால் அந்த குறைகள் தீர்க்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: பறிபோகிறதா அண்ணாமலையின் தலைவர் பதவி..? புதிய தலைவர் ரேசில் வானதி, தமிழிசை, நயினார்..!