இங்கே வந்து இப்படியா பேசுவது..? பஞ்சாப் முதல்வரின் பேச்சால் கடுப்பான மு.க.ஸ்டாலின்..!
இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே எம்பி-க்களின் சதவீதத்தை உயர்த்தி பாஜக ஆட்சி அமைக்க முயற்சிக்கும்'' என்றும் பேசி இருந்தார் பகவந்த் மான். அதையும் இந்தியில் பேசியதுதான் இதில் மிகப்பெரிய முரண்பாடே
கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேச ஆரம்பித்ததும் மு.க.ஸ்டாலினின் முகம் ஒரு கணம் அப்படியே மாறிவிட்டது.
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காணொலி காட்சி வாயிலாக ஒடிசா முன்னாள் முதல்வரும், பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாய்க் கலந்து கொண்டார்.
கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களின் பெயர் பலகைகள்கூட அந்தந்த மாநில முதல்வர்கள் சார்ந்த அவர்களது தாய் மொழியிலும், ஆங்கிலத்திலும் என இரு மொழிக் கொள்கைக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் இடம்பெற்று இருந்தது.
இதையும் படிங்க: இதை செய்ய திமுகவுக்கு தில் இருக்கா?... நெஞ்சில் அடித்து சவால்... அமித் ஷா ருத்ரதாண்டவம்!
இந்த கூட்டத்தில் பஞ்சாப் சார்பில் அந்த மாநில முதல்வர் பகவந்த் மான் பேச ஆரம்பித்த போது மு.க.ஸ்டாலின் முகம் கடுப்பில் அப்படியே மாறிப்போனது. "தொகுதி மறுசீரமைப்பு மூலம் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை உயர்ந்தாலும் மக்களவையில் பஞ்சாப்பின் சதவீதம் குறையும். நாட்டில் தற்போது நாடாளுமன்ற தொகுதிகளின் எண்னிக்கை 543 ஆக உள்ளது. இவற்றில் பஞ்சாப் மாநிலத்தில் 13 நாடாளுமன்ற தொகுதிகள் மட்டுமே உள்ளன. இது நாடாளுமன்ற தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையில் 2.39 சதவீதம் ஆகும். இந்நிலையில், நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பில் தற்போதுள்ள எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தப்பட்டால் பஞ்சாப்பில் மேலும் 5 நாடாளுமன்ற தொகுதிகள் உருவாக்கப்படும்.
இதனால் பஞ்சாப் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை 18 ஆக உயரும். அந்த வகையில் 850 நாடாளுமன்ற தொகுதிகளில் 18 என்பது 2.11 சதவீதமாகும். மொத்த நாடாளுமன்ற தொகுதிகளில் எண்ணிக்கை கூடினாலும், நாடாளுமன்றத்தில் எங்களுடைய (பஞ்சாப்) பங்களிப்பு என்பது குறைந்து விடும். ஒருவேளை பஞ்சாப்பில் தற்போது தொகுதிகளின் சதவீதத்தை அதே அளவில் தக்க வைக்க வேண்டுமானால் எங்களுக்கு 21 தொகுதிகளை கொடுக்க வேண்டும். ஆனால், பஞ்சாப்பில் ஒருபோதும் பாஜக ஆட்சி அமைக்காது.
வட இந்தியா, இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே எம்பி-க்களின் சதவீதத்தை உயர்த்தி பாஜக ஆட்சி அமைக்க முயற்சிக்கும்'' என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் பேசி முடிக்கும் வரை ஒப்புக்கு தலையாட்டிக் கொண்டிருந்தார் மு.க.ஸ்டாலின். காரணம், இந்தி எதிர்ப்பை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், பகவந்த் மான் அவரது தாய்மொழியில் பேசாமல் இந்தியில் பேசியது மு.க.ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால்தான் பகவந்த் மான் பேச ஆரம்பித்ததுமே மு.க.ஸ்டாலினின் முகமே மாறிவிட்டது.
இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும், ''வட இந்தியா, இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே எம்பி-க்களின் சதவீதத்தை உயர்த்தி பாஜக ஆட்சி அமைக்க முயற்சிக்கும்'' என்றும் பேசி இருந்தார் பகவந்த் மான். அதையும் இந்தியில் பேசியதுதான் இதில் மிகப்பெரிய முரண்பாடே…
இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்பை மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும்.. கூட்டு நடவடிக்கைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!