‘குழந்தைடா, நீ கத்துக்கோ...’ பும்ராவைப் புகழ்ந்து விராட் கோலியை காலி செய்த கைஃப்..!
விராட் கோலி பெயரை சொல்லவில்லை. ஆனால் அவரது வார்த்தைகளில் இருந்த அர்த்தம் விராட் கோலியை மையப்படுத்தியே இருப்பது தெளிவாகிறது.
பும்ராவை பாராட்டி விராட் கோலியை தாக்கியுள்ளார் முகமது கைஃப். ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை பும்ரா காலி செய்த போதே கைஃப் விராட் கோலையை மறைமுகமாக குத்திக்காட்டியுள்ளார்.
கைஃப் யாரைப் பற்றி பேசுகிறார் என்று யூகிப்பது கடினம் அல்ல? நிச்சயமாக அவர் விராட் கோலி பெயரை சொல்லவில்லை. ஆனால் அவரது வார்த்தைகளில் இருந்த அர்த்தம் விராட் கோலியை மையப்படுத்தியே இருப்பது தெளிவாகிறது.
முகமது கைஃப் தனது எக்ஸ் வலைதளத்தில் ‘‘பும்ராவைப் பாருங்கள்... ஆஸ்திரேலியாவின் முக்கிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்தி அவர் எப்படி கொண்டாடுகிறார்? கோபம் இல்லை, காட்டுத்தனமான கொண்டாட்டங்கள் இல்லை... முகத்தில் புன்னகை... குழந்தைகள் இதிலிருந்து கற்றுக்கொள்ளலாம். அவர்கள் தங்கள் முன்மாதிரிகளை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்’’ என்று பகிர்ந்து இருந்தார்.
இதையும் படிங்க: Laptop வாங்கப்போறீங்களா..? இதெல்லாம் செக் பண்ணாம வாங்காதீங்க
இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் டிராவிஸ் ஹெட் ரன்களை குவிக்க முடியவில்லை. மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 7 பந்துகளை எதிர்கொண்ட அவர் பும்ராவின் பந்து வீச்சில் அவுட்டானார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஹெட் ரன் ஏதும் எடுக்காதது இதுவே முதல் முறை. அதாவது அவர் பூஜ்ஜியத்தில் டக் அவுட் ஆனார். இந்த வகையில் இந்தியா பெற்ற இந்த வெற்றி மிகப்பெரியது. இருந்தபோதிலும், பும்ரா மிகவும் எளிமையான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். அதைத்தான் கைஃப் பாராட்டினார்.
மறுபுறம், விராட் கோஹ்லி மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இன்று காலை ஆஸ்திரேலிய அறிமுக வீரர் சாம் கான்ஸ்டன்ஸை தோளில் தட்டியது சர்ச்சையானது. இந்த விவகாரம் தீவிரமடைந்து தற்போது அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. விராட் கோலியின் போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. விராட்டின் இந்த செயலையே குறிவைத்து கைஃப் கூறியிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்க கூறுகிறார்கள்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ..பாஜக தமிழிசை கடும் தாக்கு