இந்திய குழந்தைகளை நாடு கடத்தும் டிரம்ப்... உச்சக்கட்ட அதிர்ச்சியில் பெற்றோர்!!
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த விசா கட்டுப்பாடு காரணமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய குழந்தைகள் நாடு கடத்தப்படும் அபாயம் உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த விசா கட்டுப்பாடு காரணமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய குழந்தைகள் நாடு கடத்தப்படும் அபாயம் உள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். டிரம்பின் ஆட்சியில் ஏற்படும் மாற்றம் உலக நாடுகளிலும் எதிரொலித்து வருகிறது. சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க ஏகப்பட்ட விதிகளை நியமித்து வருகிறார். சட்ட விரோத குடியேற்றம் மட்டுமில்லாமல் சட்டப்பூர்வமான குடியேற்றத்தில் கட்டுப்பாடுகளை விதிப்பதால் அங்குள்ள இந்திய வம்சாவாளியை சேர்ந்த குழந்தைகள் நாடு கடத்தப்படும் சூழலில் உள்ளன.
ஹெச்4 விசாவின் கீழ் மைனர்களாக அமெரிக்காவில் குடியேறியவர்கள், ஹெச்1பி விசா வைத்திருப்போரின் பிள்ளைகள், அவர்களின் குழந்தைகள் 21வயது வரை பெற்றோருடன் இருப்பார்கள் இந்த விதிகளில் மாற்றம் கொண்டு வந்ததால் அவர்கள் உடனே நாடு கடத்தப்படலாம். இதுமட்டுமில்லாமல் வேறெந்த ஒரு விசாவுக்கும் தகுதி பெற மாட்டார்கள். இது ஹெச்1 விசா வைத்திருக்கும் இந்தியர்களை கடுமையாக பாதிக்கிறது. சரியான நேரத்தில் கிரீன் கார்டு பெறாதவர்கள் அமெரிக்காவில் வசிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: ஜெலென்ஸ்கி ஆட்சியைக் கவிழ்க்க சதி..! உக்ரைனுக்கு ரகசியக் குழுவை அனுப்பிய டிரம்ப்..!
இதற்கு அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை சிக்கலே காரணம் என கூறபப்டுகிறது. அங்குள்ள 21 வயதாகும் இந்தியர்கள் பெற்றோர் இல்லாமல் தாயகம் திரும்பும் சூழல் ஏற்படலாம். இந்த புதிய அமெரிக்காவின் விசா கெடுபிடியால் இந்தியர்கள் தங்களின் குழந்தைகளை பிரியும் சூழலை நினைத்து கலக்கத்தில் உள்ளது. இதேநேரம் அமெரிக்காவின் 13 வயது சிறுவனை உளவுத்துறை அதிகாரியாக அறிவித்து அழகு பார்த்திருக்கிறார் அதிபர் டிரம்ப். அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் முதல் முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் உரையாற்றினார்.
அப்போது 13வயது சிறுவனை அறிமுகப்படுத்திய டிரம்ப், உளவுத்துறையிம் அதிகாரி பதவி வழங்கினார். மேலும், சிறுவனுக்கு உளவுத்துறை அதிகாரிக்கான பேட்ச் வழங்கவும் உத்தரவிட்டார். பின்னர் பேசிர டிரம்ப், உங்கள் காவல்துறையை நேசிக்கும் இளைஞன் எங்களுடன் இருக்கிறார். அவர் பெயர் டிஜே டேனியல். இவர் காவல்துறை அதிகாரியாக கனவு கட்டு கொண்டிருக்கிறார். டிஜே டேனியல் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் தைரியமாக அதை எதிர்த்து போராடி வருகிறார் என்றார். டிரம்ப் சொன்னதை கேட்டதும் அங்கிருந்த அனைவரும் அந்த சிறுவனை வாழ்த்தினர்.
இதையும் படிங்க: 'பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் கொன்று விடுவேன்'..! ஹமாஸுக்கு டிரம்ப்பின் கடைசி எச்சரிக்கை