×
 

எம்.பி. தேர்தலில் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி..!

மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன், 2 லட்சத்து 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை  செல்லாது என அறிவிக்கக் கோரி அந்த தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

அதில், தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 17ம் தேதி நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 19ம் தேதி வாக்குப் பதிவு நாளான்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பிரச்சாரம் மேற்கொண்டதாகவும், இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது எனக் கூறப்பட்டுள்ளது. 

மேலும், பிரச்சார செலவு, விளம்பர செலவு, பூத் ஏஜெண்ட்களுக்கு செலவிட்ட தொகையை முறையாக தெரிவிக்கவில்லை எனவும், தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட 95 லட்சம் ரூபாயை விட அதிக தொகையை தயாநிதி மாறன் செலவிட்டதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: எம்.பி.யாகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்..! மோடிக்கு இனி தலைவலி தான்..!

மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறவில்லை என்பதால், தேர்தல் செல்லாது என உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்த  குற்றச்சாட்டுக்களை நீக்க கோரி தயாநிதி மாறன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரர் எம்.எல்.ரவி, மனுவில் கூறியிருந்த குற்றச்சாட்டுக்களை நீக்கி, தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணங்களும் இல்லை எனக் கூறி, தயாநிதி மாறனுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஒவ்வொரு முறையும் சட்டமன்ற தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ முடிந்தபிறகு தேர்தல் வெற்றிகளை எதிர்த்து தோல்வி அடைந்தவர்களில் யாரேனும் ஒருவர் வழக்கு தொடுப்பது வாடிக்கையாக உள்ளது. ஜனநாயகத்தில் இது தவிர்க்க முடியாத அம்சமாக இருந்தாலும், இதனால் ஏற்படும் நேர விரயம், மக்கள் பணிகளை செய்யவிடாமல் தவிர்த்தல் ஆகிய அளவுகோல்களில் இத்தகைய வழக்குகளுக்கு ஒரு வரன்முறையை தேர்தல் ஆணையம் கொண்டு வரவேண்டும். அப்போது தான் முகாந்திரம் இருந்தால் மட்டுமே இத்தகைய வழக்குகளை பதிவு செய்ய இயலும் என்ற நிலை ஏற்படும். இல்லையேல் இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க மட்டுமே பயன்படும். 

இதையும் படிங்க: காங்கிரஸை எதிர்த்தால் மட்டுமே செல்வாக்கு... சிங்கப்பாதைக்கு அடிப்போட்ட சசி தரூர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share