தமிழக "ஹேஸ்டேக்" போர் சில்லற தனமானது..! கழுவி ஊற்றிய கார்த்தி சிதம்பரம்..!
ஹேஷ்டேக்ஸ் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம்.
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் நடைபெற்று வரும் ஹேஷ்டேக் போர்கள் மிகவும் சில்லறைத்தனமானது என காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி பி.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் அதற்கு ஒரு வித்தியாசமான ஆங்கிளில் கருத்து தெரிவிப்பது கார்த்தி சிதம்பரத்தின் பாணி ஆகும். அதேபோன்றுதான் தமிழகத்தில் திமுகவுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் வார்த்தை போரை தாண்டிய ஹாஸ்டேக் போர் குறித்து, கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சூசகமாக யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், தமிழக ஹாஸ்டேக் போர்கள் மிகவும் சில்லித்தனமானது என ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எப்போதுமே யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பயப்படாமல் தைரியமாக கருத்துக்களை தெரிவிக்கக் கூடியவர் கார்த்தி சிதம்பரம். கூட்டணி கட்சியான திமுகவின் செயல்பாடுகள் குறித்து பலமுறை தைரியமாக விமர்சனம் செய்தவர் இவர். அதேபோன்று காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரத்திற்கு எதிரான கருத்தை தெரிவித்து வரும் வேளையில் எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரம் மிகச் சரியானது அதில் யாரும் ஏமாற்ற முடியாது, இந்தியாவில் சரியான முறையிலே தேர்தல் நடந்து வருகிறது என்பதை அடித்து ஆணித்தரமாக கார்த்திக் சிதம்பரம் கூறி வருகிறார்.
இதையும் படிங்க: பார்லிமென்டில் பச்சை பொய்..! இந்திய வம்சாவளி எம்.பிக்கு ரூ.9 லட்சம் அபராதம்..!
தனது மனதில் சரியென எதுப்பட்டதோ அதை தயங்காமல் வெளிப்படுத்தக்கூடிய கார்த்தி சிதம்பரம் கூட்டணி கட்சியான திமுகவும், இந்த பிரச்சனையில் இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளாமல் தைரியமாக கருத்து தெரிவிப்பது தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கு.. நீதிமன்றம் போங்க திருமா.. கார்த்தி சிதம்பரம் கொடுத்த வேற லெவல் ஐடியா.!