அது மட்டும் நடந்தால் அதிமுக காணாமல் போய்விடும்...ர.ர-க்களின் தூக்கத்தை கெடுத்த காங்கிரஸ் எம்.பி...!
மறைந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு செய்யும் துரோகம் ,அதிமுக அல்ல, அமித்ஷா திமுக - வாக மாறியுள்ளது என எம்.பி.மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
மறைந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு செய்யும் துரோகம் ,அதிமுக அல்ல, அமித்ஷா திமுக - வாக மாறியுள்ளது என எம்.பி.மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள அவரது அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர் கூறும் போது, அண்ணாமலை முறைகேடு நடக்கும் இடத்தை எல்லாம் விட்டுவிட்டு , 100 நாள் வேலை நடைபெறும் இடத்தில் நேரில் சென்று பார்த்தால் தான் தெரியும். பார்க்காமல், அறியாமல் தெரியாமல் பேசும் அண்ணாமலை , 100 நாள் வேலை செய்யும் தொழிலாளருடைய ஊதியத்தை ஏன் வழங்க மறுக்கிறீர்கள்? வேலை கேட்கும் போது வேலையை ஏன் கொடுக்க மாட்டீர்கள்? இந்த இரண்டிற்கும் பதில் சொல்லாத அண்ணாமலை, முறைகேடு நடக்கிறது என்று தட்டி கழித்து வருகிறார்.
நான்கு மாத வேலைகளுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை என்பது பிரச்சனையாக உள்ளது. இதற்குத்தான் மக்கள் போராட்டம் செய்கிறார்கள்.100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு என்றால் எந்தெந்த பஞ்சாயத்தில் முறைகேடு? அங்கு நேரில் சென்று அண்ணாமலை ஆய்வு நடத்தட்டும், வேலை பார்ப்பவர்கள் காலை மாலை இருவேளை ஆன்லைனில் போட்டோ எடுத்து அனுப்புகின்றனர். இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்.. கே.பி. முனுசாமி தடாலடியாக அறிவிப்பு.!!
அண்ணாமலை ஏழை, பாமர மக்களை , அப்பாவி மக்களை ஒன்றுமே தெரியாதபோல் தண்டிக்கப்படுவது நியாயமா?. இதன் மூலம் இந்த பாஜக அரசு அதானி அம்பானிக்குமான அரசு என்பதை இந்த செயலிலேயே காட்டுகிறது. வேலை பார்த்தவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாதது , பச்சை துரோகம். இது தவறான போக்கு.ஒன்றிய அரசு செய்யும் தவறினால் மாநில அரசின் மீது மக்களுக்கு கோபம் வரும் என்று அண்ணாமலை எண்ணுகிறார், அது நடக்காது.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் அதிமுகவும் சேர்ந்து காணாமல் போய்விடும். முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அமித்ஷாவை இரும்பு மனிதர் என பேசியதற்கு பதில் அளித்த மாணிக்கம் தாகூர், உதயகுமார் 15 நாட்களுக்கு ஒரு முறை தனது பேச்சை மாற்றிக் கொள்ளக் கூடாது, பல்வேறு வித்தைகளை கற்றுக் கொண்ட உதயகுமார் , என்னென்ன பேசினார் என்பது அவருக்கே தெரியும் எவ்வளவோ கதையை சொல்லி இருக்கிறார். ரீலே அந்து போகும். மிக விரைவில் திருச்சி விமான நிலையத்தை அம்பானி, அதானிக்கு ஒன்றிய பாஜக அரசுக்கு தாரை வார்க்க போகிறது.
அதிமுகவில் உள்ள எல்லா தலைவருமே அமித்ஷாவை பார்க்க சென்று வருகின்றனர். இதன் மூலம் இந்த கூட்டணி உறுதியாகிவிட்டது. இதனால் மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு இவர்கள் செய்யும் பச்சை துரோகம் என்று கூறலாம். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் அந்தக் கட்சியோடு அதிமுகவும் காணாமல் போய்விடும் என்றார்.
இதையும் படிங்க: தம்பி விஜய்க்கு எங்களைப் பற்றி நல்லா தெரியும்... திமுகவின் கரிசனம் அதிமுகவுக்கு தேவையில்லை - சிதறவிடும் செல்லூரார்..!