பானையைக் கைப்பற்றிய திருமாவளவன். விசிகவுக்கு ரூட்டை கிளியராக்கிய தேர்தல் ஆணையம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மா நில கட்சியாக முறைப்படி அங்கீகரித்துள்ள தேர்தல் ஆணையம், அக்கட்சிக்குப் பானை சின்னத்தையும் ஒதுக்கியுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மா நில கட்சியாக முறைப்படி அங்கீகரித்துள்ள தேர்தல் ஆணையம், அக்கட்சிக்குப் பானை சின்னத்தையும் ஒதுக்கியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்,
அவருடைய முக நூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இன்று இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது" என்றும் தெரிவித்துள்ளார். இதனுடன் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தையும் இணைத்துள்ளார்.
தேர்தல் விதிமுறைகளின்படி ஒரு கட்சி மாநிலக் கட்சி என்கிற அந்தஸ்தைப் பெற சில விதிமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். தேர்தல் ஆணைய விதிப்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற, சட்டப்பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும். அல்லது பேரவைத் தொகுதிகளில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களை பெற வேண்டும். அல்லது மக்களவைத் தேர்த
லில் 6 சதவீத வாக்குகளுடன் ஒரு மக்களவை தொகுதியில் வெற்றி பெற வேண்டும். அல்லது 8 சதவீத வாக்குகளை பெற வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2024 மக்களைவைக்கு நடைபெற்ற தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் அக்கட்சிஇச்சூழலில் தேர்தல் ஆணையம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில கட்சி என்கிற அந்தஸ்தை வழங்கியுள்ளது. விசிக மாநிலக் கட்சி அந்தஸ்தை எட்டியதால், அக்கட்சிக்குப் பானை சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
2019 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் பானை சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் களமிறங்கினர். இருவரும் வெற்றி பெற்ற நிலையில், விசிக பொதுச்செயலாளராக இருந்துகொண்டு விழுப்புரம் தொகுதியில் திமுக சின்னத்தில் களமிறங்கி வெற்றி பெற்றது சர்ச்சையானது. இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதியில் விசிக பானை சின்னத்தில் களமிறங்கியது. 2024 மக்களவைத் தேர்தலிலும் விசிக விழுப்புரம், சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் பானை சின்னத்தில் களமிறங்கியது.
விசிக மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு பானை சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளதால், இனி திமுகவும் அக்கட்சியைத் தங்கள் சின்னத்தில் களமிறக்க முடியாது. விடுதலைச் சிறுத்தைகள் 2024 முக்கியமான ஆண்டு. 1999இல் தேர்தல் அரசியலில் அக்கட்சி அடியெடுத்து வைத்தது. இதன்மூலம் 2024இல் தேர்தல் அரசியலில் 25 ஆண்டுகளை அக்கட்சி பூர்த்தி செய்தது. திருமாவளவன் 60ஆவது பிறந்த நாளையும் கடந்த ஆண்டுதான் கொண்டாடினார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதால், அக்கட்சித் தொண்டர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணியை அழிக்கிறதா காங்கிரஸ்?