×
 

நாதக டொபசிட் காலி... ஈரோடு கிழக்கில் கோட்டை விட்ட சீமான் கட்சி...!

தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்துள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட் கூட பெறாமல் தோல்வியை சந்தித்துள்ளார். டெபாசிட் பெறுவதற்கு 25,777 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், நாதக வேட்பாளருக்கு 23,810 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சந்திரகுமார் பதிவான வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆனால் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளரான சீதாலட்சுமி டெபாசிட்டில் இருந்து படு தோல்வி அடைந்துள்ளது நாதகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திமுக வேட்பாளர் சந்திரகுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 433 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23 ஆயிரத்து 810 வாக்குகளைப் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நாத க வேட்பாளர் சீதாலட்சுமியை விட 90,629 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: சீமான் பேசிய பேச்சால் வாக்குகள் எல்லாம் போச்சா?... நாதக வேட்பாளர் விளக்கம்...!

தற்போது நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 23,810 வாக்குகளை பெற்று தோல்வியடைந்துள்ளார். இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் வாங்குவதற்கு மொத்தமாக 25,777 வாக்குகளை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் நாதக 1,967 வாக்குகள் வித்தியாசத்தில் டெபாசிட் தொகையையும் இழந்து தோல்வியை சந்தித்துள்ளது.

டெபாசிட் தொகை என்பது ஒவ்வொரு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தேர்தல் அலுவலரிடம் செலுத்துவர்கள். சட்டமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் ரூ.10 ஆயிரம் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். தேர்தலுக்கு பின் இந்த டெபாசிட் தொகை மீண்டும் அளிக்கப்படும். ஆனால் அதற்கு, அந்த வேட்பாளர் தேர்தலில் பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்கினை பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: எட்டித்தொட முடியாத உயரத்தில் திமுக; ஏக்கப் பெருமூச்சில் நாதக! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share