நீட் எதிர்ப்பு முதல்வரின் சுயநல நாடகம்..! திமுகவை ரோஸ்ட் செய்த அண்ணாமலை..!
நீட் எதிர்ப்பு என்பது தமிழக முதலமைச்சரின் சுயநலம் நாடகம் என பாஜக மாநில அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் விலக்கு தொடர்பாக இன்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நீட் தேர்வு வந்த பிறகே, தமிழகத்தில் சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களும், மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள் என்றும் ஆனால், தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக, நீட் தேர்வை எதிர்த்துக் கொண்டிருக்கிறது திமுக எனவும் குறிப்பிட்டார்.
திமுகவின் முன்னாள் அமைச்சர் தஆற்காடு வீராசாமி, தாங்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் எப்படி பணம் விளையாடுகிறது என்று வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றும் ஆனால், இன்னும் நீட் எதிர்ப்பு என்று பல நாடகங்கள் நடத்தி, பொதுமக்களை முதலமைச்சர் ஸ்டாலின் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் எனவும் கூறினார். அப்படி ஒரு நாடகமான இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழக பாஜக பங்கேற்கவில்லை என அண்ணாமலை கூறினார்
இதையும் படிங்க: குமரி அனந்தன் உடலுக்கு ஆளுநர் ரவி நேரில் அஞ்சலி.. திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல்..!
ஏற்கனவே நீட் தேர்வு தொடர்பாக, தமிழக மக்கள் சார்பில், தமிழக பாஜக கேட்டிருந்த பல கேள்விகளுக்கு, திமுக அரசு இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் டாஸ்மாக் ஊழல் விசாரணைக்குத் தடை கேட்டும், கள்ளச்சாராய மரணம் குறித்த விசாரணையைத் தடுக்கவும் நீதிமன்றம் செல்லும் உங்கள் அரசு, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், நீட் தேர்வுக்காக நீதிமன்றம் செல்லாமல், தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஏன் நாடகமாடுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு குறித்து திமுக கூறுவது உண்மை நிலவரத்துக்கு நேர்மாறாக இருப்பதாகவும், நீட் தேர்வுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கான எந்த ஆதாரங்களையும் இதுவரை முன்வைத்திருக்கிறீர்கள் என்றும்,அறிவாலயத்தில் இருந்து தயார் செய்து கொடுத்த முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையில், நீட் தேர்வுக்கு முன்பாக, கடந்த 2010 - 2014 ஆண்டுகளில், மருத்துவக் கல்வியில் சேர்ந்த தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை என்ன என்பதை ஏன் குறிப்பிடவில்லை என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.
நீட் தேர்வு மட்டுமல்ல, எந்தத் தேர்வானாலும் நமது மாணவர்கள் சாதனை படைக்கும் திறமை வாய்ந்தவர்கள் என்று கூறிய அண்ணாமலை ஆண்டுதோறும் நீட் தேர்ச்சி விகிதமே இதற்கு சாட்சி என்றும், போதும் முதலமைச்சர் அவர்களே நீட் எதிர்ப்பு என்ற பெயரில், நீங்கள் ஆடும் சுயநல நாடகம். எனவே, இனியாவது உங்கள் நாடகங்களை நிறுத்தி விட்டு, தமிழக மாணவர்களை நிம்மதியாகப் படிக்க விடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நீலிக்கண்ணீர் வடிக்காதீங்க... ரூ.100 மானியம் எங்க? - திமுகவை பொளந்தெடுத்த அண்ணாமலை!