இந்தியாவே அழுதுக்கிட்டு இருக்கு இரவு விருந்து தேவையா..? இபிஎஸ் மீது குவியும் விமர்சனங்கள்..!
சென்னை பசுமைவழி சாலையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அரசு இல்லத்தில் நேற்று இரவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விருந்து நடைபெற்றது சோசியல் மீடியாவில் கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தனக்கு ஆதரவாக உள்ள 62 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு நேற்று தனது இல்லத்தில் வைத்து இரவு விருந்து கொடுத்தார். பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்ததால் சில எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களை கூல் ஆக்குவதற்காக இந்த விருந்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விருந்தில், மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் சுக்கா, முட்டை, இறால் தொக்கு ஆகிய 7 வகையான அசைவ உணவுகளும், இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, சாதம், சாம்பார், ரசம், பொரியல், அவியல் என சைவ உணவுகளும் இடம் பெற்றிருந்தன.
இந்த இரவு விருந்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் ஹுசைன், மூத்த தலைவர்கள் பொன்னையன், தம்பிதுரை, நத்தம் விஸ்வநாதன், முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி, வளர்மதி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்பிக்களும் பங்கேற்றனர். பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் அமர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உணவருந்தினார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு இரவு விருந்து அளித்த இபிஎஸ். காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் சமயத்தில் எடப்பாடி பழனிசாமியின் விருந்து கொண்டாட்டம் விமர்சனத்திற்கு உண்டாகியிருக்கிறது. pic.twitter.com/pBpGH85ZC7
— Barakath Ali (@sambarakathali) April 23, 2025
இதையும் படிங்க: வரும் 25ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..! இபிஎஸ் அறிவிப்பு..!
இதனிடையே, ஜம்மு - காஷ்மீரில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் நாடே கொந்தளித்து போயுள்ள சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி இப்படி இரவு விருந்து வைத்து கொண்டாடியது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. 26 சுற்றுலா பயணிகள் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த துயர சம்பவத்தால் நாடே அழுது கொண்டிருக்கும் போது உங்களுக்கு இரவு விருந்து கொண்டாட்டம் தேவையா? என அதிமுக பொதுச்செயலாளரை நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
நாடே அதிர்ச்சியில் இருக்கும் போது இன்னைக்கு விருந்து கொடுத்துருக்கார் பழனிசாமி …
— Vignesh Anand (@VigneshAnand_Vm) April 23, 2025
இரண்டு நாள் கடந்து கூட விருந்து வைக்கலாம் …
அறிவும் இல்ல மனிதாபிமானமும் இல்ல ..
இதையே திமுக இல்ல வேற எதாவது ஒரு சின்ன கட்சி செய்திருந்தால் ஊடக ப்ரோக்கர்கள் எப்படி டான்ஸ் ஆடி இருப்பார்கள் ? pic.twitter.com/CWzSusWwfm
இதையும் படிங்க: வக்கில்லாத கோமா அரசே..! 3 பேர் இறப்புக்கு நீங்க மட்டும் தான் காரணம்.. கொதிப்பில் இபிஎஸ்..!