×
 

‘புதிய வருமானவரி மசோதா’ : பட்ஜெட் கூட்டத்தில் மத்திய அரசு அறிமுகம்? முக்கியத்துவம் என்ன?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய மசோதா மூலம் ஏற்கெனவே இருக்கும் வருமான வரி சட்டத்தை எளிமையாக்கவும், பக்கங்களை 60 சதவீதம் வரை குறைக்கவும் முடியும் என்பதற்காக அறிமுகம் செய்யப்படலாம்.
இப்போதுள்ள வருமான வரிச் சட்டம் 1961ம்ஆண்டு பழையது. இந்த சட்டத்தை 6 மாதங்களுக்குள் மறுஆய்வு செய்து முழுமையான சட்டமாக மாற்றுவோம் என்று கடந்த ஜூலை மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.


இது குறித்து மத்திய நிதிஅமைச்சக வட்டாரங்கள் கூறுகையில் “ பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படலாம். இது ஏற்கெனவே இருக்கும் வருமானவரிச் சட்டத்தில் திருத்தம் அல்ல, முழுமையான புதிய சட்டமாக இருக்கும். இதற்கான வரைவு மசோதாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் அனுமதியளித்துவிட்டது, ஆதலால் பட்ஜெட் கூட்டத்தின் 2வது அமர்வில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம்” எனத் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. முதல் பிரிவு ஜனவரி 31ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 13ம் தேதிவரையிலும், 2வது பிரிவு கூட்டம், மார்ச் 10ம் தேதி தொடங்கி, ஏப்ரல்4ம் தேதிவரை நடக்கிறது.

இதையும் படிங்க: பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்: பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 தொடக்கம்..


குடியரசுத் தலைவர் தெளரபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. அன்றைய நாள் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மறுநாள் பிப்ரவரி 1ம் தேதி பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்பகுதி 9 அமர்வுகளாக நடத்தப்படுகிறது, குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தும், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் விவாதங்களுக்கு பதில் அளிப்பார். அதன்பின் 2வது அமர்வில், பல்வேறு மானியக் கோரிக்கைகள், மசோதாக்கள் மீதான விவாதங்கள் நடக்கும்.


இந்த புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்வார். இந்த சட்டம் குறித்து முழுமையான ஆய்வுகளையும், கண்காணிப்பையும் மத்திய நேர்முகவரி ஆணையம் ஆய்வு செய்துவிட்டது, எளிமையாகவும், எளிதில்புரிந்து கொள்ளும் விதத்தில், சிக்கல் இல்லாமல், வரி செலுத்துவோருக்கு எளிமையாக இருக்கும் வகையில் ஷரத்துகள்  உள்ளனவா என்று ஆய்வு செய்துள்ளது. இந்த மசோதாவை விரிவாக ஆய்வு செய்ய 22 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

எளிமையான மொழி, சட்டச்சிக்கல், குழப்பம், ஆலோசனை ஆகிய பிரிவுகளில் வருமானவரி துறை 6500 ஆலோசனைகளை மக்களிடம் இருந்து பெற்றுள்ளது. வருமான வரிச் சட்டத்தில் ஏராளமான குழப்பமான பிரிவுகள் நீக்கப்பட்டு, எளிமையாக வடிவமைக்படலாம் எனத் தெரிகிறது.
வருமான வரி சட்டம் 1961 –சட்டத்தில் நேர்முக வரிகளான தனிநபர் வருமானவரி, கார்ப்பரேட் வரி, பங்குவரிவர்த்தனை வரி, என 298 பிரிவுகளும், 23 பகுதிகளும் அடங்கியுள்ளன. இந்த பகுதிகளை 60 சதவீதம் குறைக்கும் வகையில் புதிய வருமான வரிச்ச ட்டம் இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ஜிஎஸ்டி-யால் யாருக்கு ஆதாயம்? ஏழை, நடுத்தர மக்களின் சேமிப்பை காலி செய்யும் வரி..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share