×
 

விடுதலை 2 படத்திற்கு வந்த புது ஆஃபர்... உச்சக்கட்ட குஷியில் வெற்றிமாறன்!!

இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை 2 திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் படத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர் இயக்கிய படங்களான பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை, விசாரனை, விடுதலை ஆகிய அனைத்து படங்களும் மெகா ஹிட் அடித்தது. குறிப்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் 1 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில், விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், இளவரசு, ராஜீவ் மேனன், கௌதம் மேனன், சேத்தன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி விடுதலை படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய கதாபாத்திரமான நக்சல் பாரி இயக்கத்தை சேர்ந்த புலவர் கலியபெருமாளாக நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைத்திருந்தார் இயக்குநர் வெற்றிமாறன். விஜய் சேதுபதியும் தனது சிறப்பான நடிப்பால் கலியபெருமாளாகவே வாழ்ந்திருப்பார். இந்த படம் ஒருபுறம் நல்ல வரவேற்பை பெற்றாலும் மறுபுறம் சில விமர்சனங்களையும் பெற்றது.

இதையும் படிங்க: தாமதமாகும் சூர்யாவின் வாடிவாசல்... காரணம் இதுதானாம்!!

மேலும் பல சர்ச்சைகளும் எழுந்தன. இதனிடையே கடந்த ஆண்டு டிசம்பரில் விடுதலை படத்தின் 2வது பாகம் வெளியானது. ஆனால் இது பாகம் 1 அளவிற்கு மக்கள் வரவேற்பை பெற என்று கூறப்படுகிறது. இந்த பாகத்தில் விஜய்சேதுபதி நடித்த காதபாத்திரத்தின் வாழ்க்கை வரலாற்றை மைய படுத்தி எடுத்ததே காரணம் என கூறப்படுகிறது. மேலும் சூரிக்கும் பெரிதாக சீன்கள் பாகம் 2ல் பெரிதாக இல்லை. ஆங்காங்கே வந்து போவது போல் தான் இருந்தது.

இருந்தபோதிலும் இதில் இடம்பெற்றிருந்த வசனங்கள் திரையரங்குகளில் கிளாப்ஸை வாங்கியது என்றே சொல்லலாம். அவ்வளவு அழுதமான மற்றும் ஆழமான வசனங்கள். இந்த நிலையில் இந்தப் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விடுதலை 2 திரைப்படம் ஹிந்தியிலும் டப் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஜீ 5 ஓடிடி தளத்தில் திரைப்படம் தற்போது ஸ்ட்ரீமாகிக்கொண்டிருக்கும் வேலையில் படத்தின் வரவேற்பை பார்த்து இதனை ஜீ 5 நிறுவனம் ஹிந்தியிலும் டப் செய்து தங்களது ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு போல ஹிந்தியிலும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதையும் படிங்க: வட சென்னை 2 வேணுமா.. வெற்றிமாறன் கொடுத்த ஷாக் நியூஸ்.. ரசிகர்களின் ரியாக்ஷன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share