ஆன்லைன் கேமிங்-ஆல் அதிகரிக்கும் தற்கொலைகள்.. புதிய கட்டுப்பாடுகள் விதித்து அதிரடி காட்டிய ஆணையம்..!
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் முகத்தால் தற்கொலைகள் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளை கடுமையாக்கி தமிழ்நாடு ஆன்லைன் கேம்மிங் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பரவி வரும் நோய்களில் பெறும் நோயாக இளைஞர்கள் மத்தியில் பரவி வருவது தான் ஆன்லைன் சூதாட்டம் மோகம். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்லைன் சூதாட்டங்களினால் பணத்தை இழந்த பணத்தை இழந்து பலரும் தற்கொலை செய்யும் நிலை அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்தது. இந்நிலையில் தான் தமிழக அரசின் தடைக்கு எதிராக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் பலரும் இணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
பின்னர் தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரம்மி போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து கூத்தரவிட்டது.
இதையும் படிங்க: உதறித் தள்ளிய பாஜக... மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமாவின் பகீர் பின்னணி..!
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிடவே, வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே சுமார் 20க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்னலையில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் விதிகளை கடுமையாக்கி தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி விளையாட தமிழ்நாடு ஆன்லைன் கேம்மிங் ஆணையம் தடை உதித்துள்ளது. அதாவது நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் கேமிங் பயனர்களை அனுமதிக்க கூடாது என்றும் ஆன்லைனில் விளையாடுபவர்கள் யார் என்பது குறித்து கண்டிப்பாக நிறுவனங்கள் கேஒய்சி வாங்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணம் கட்டும் ஆன்லைன் விளையாடு விளையாட்டுகளுக்கு ஆதார் அட்டை சரிபார்ப்பு இனி கட்டாயப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டுக்களில் தினம் வாரம் மாதம் எவ்வளவு பணம் செலவாகிறது என்று விளையாடுபவர்களுக்கு ஆன்லைன் நிறுவனம் தர வேண்டும் என்றும்
ஆன்லைனில் விளையாடுபவருக்கு ஒவ்வொரு முப்பது நிமிடங்களுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இதனை மீறும் நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் சார்பில் எச்சரிக்கை விடுத்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: மகாகும்பமேளாவில் காங்கிரஸ் துணை முதல்வர் டி.கே.சி..! தொடர்ந்து குவியும் பக்தர்கள்