×
 

முழங்காலில் நடந்த நிதிஷ் குமார் ரெட்டி! திருப்பதி மலைப்படிகளில் ஏறி நேர்த்திக்கடன்...

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரில் சிறப்பாக ஆடியதையடுத்து, திருமலை திருப்பதி மலைக்கு வந்திருந்த நிதிஷ் குமார் ரெட்டி, முழங்காலிட்டு நடந்து திருப்பதி மலையில் ஏறி நேர்த்திக்கடன் செலுத்தினார்.

பந்துவீச்சு ஆல்ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி, பார்டர் கவாஸ்கர் கோப்பைத்தொடரில் 298 ரன்கள் சேர்த்து 38 சதவீத சராசரி ரன்கள் வைத்திருந்தார். சீனியர் பேட்டர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் பேட் செய்யத் தடுமாறியபோது, நிதிஷ் ரெட்டி அனாசயமாக ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொண்டார். 
பார்டர் கவாஸ்கர் தொடரில் ஒரு சதம் உள்பட 298 ரன்களைக் குவித்தார்.  நிதிஷ் குமாரின்  பேட்டிங் முக்கியப் போட்டிகளில் இந்திய அணி பெரிய சரிவிலிருந்து தப்பிக்க உதவியாக இருந்தது. பாக்ஸிங்டே டெஸ்டில் 5 விக்கெட்டுகளை நிதிஷ் ரெட்டி வீழ்த்தி  சிறப்பான பங்களிப்பு செய்தார்.


பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இந்திய அணி கண்டறிந்த சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக நிதிஷ் ரெட்டி இருந்து வருகிறார். இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் இழந்து தாயகம் திரும்பியுள்ளது.


ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டிணம் நகரைச் சேர்ந்தவரான நிதிஷ் குமார் ரெட்டி, கடந்தசில நாட்களுக்கு முன் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அதற்கு முன்பாக, விசாகப்பட்டிணத்தில் உள்ள கஜுவகா பகுதியில் நிதிஷ் குமாருக்கு அப்பகுதி மக்கள் கேரவேனில் நிற்க வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்று சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர். அப்போது நிதிஷ் குமார் ரெட்டியுடன் அவரின் தந்தை முட்யாலு ரெட்டியும் உடன் சென்றார். 

இதையும் படிங்க: "ஹிந்தி தெரியாது போடா" பாணியில் கிரிக்கெட்டர் அஸ்வின் அதிரடி...


பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்கு நன்றி செலுத்தும் விதத்தில் திருப்பதிக்கு நிதிஷ் ரெட்டி சில நாட்களுக்கு முன் சென்றார். திருப்பதி மலைப்பகுதியில் உள்ளபடிகளில் நடந்து செல்லாமல் முழங்கலிட்டு நடந்தே சென்று மலையை அடைந்து சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். நிதிஷ் ரெட்டிமுழங்காலில் நடந்து, மாடிப்படிகளில் ஏறும் வீடியோவை அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

பார்டர் கவாஸ்கர் தொடர்முடிந்தபின் நிதிஷ் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகளைப் பார்க்க அலாரம் வைப்பதில் தொடங்கி, ஆஸ்திரேலிய கடற்கரைகளை நேரடியாக உணருவது வரை, கடந்த இரண்டு மாதங்கள் ஒரு வீரராகவும் ஒரு நபராகவும் வளர ஒரு வாய்ப்பாக அமைந்தது. நாங்கள் விரும்பிய விதம் தொடரை முடிக்கவில்லை. நாங்கள் மீண்டும் இன்னும் உறுதியானவர்களாக வலுவானவர்களாக வருவோம்” எனத் தெரிவித்திருந்தார்

இதையும் படிங்க: தந்தையின் இதயத்தை உடைத்த அஸ்வின்... மனம் உடைந்த கடைசி நிமிடம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share