×
 

‘ஒரு நாடு, ஒரு கட்சி’ என்பது 140 கோடி மக்கள் மீது திணிக்கப்படுகிறது: மல்லிகார்ஜூன கார்கே காட்டம்

ஒரு நாடு ஒரு கட்சி என்பதை 140 கோடி மக்கள் மீது திணிக்கும் போக்கு நடக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் மீது ஆளும் கட்சியால் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

நாட்டின் 76-வது குடியரசு தின நாள் இன்று நாடுமுழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நாளில், காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்த்து கடுமையான அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது: வேற்றுமையில் ஒற்றுமை எனஅறு நம்பியிருக்கும் 140 கோடி மக்கள் மீதும் ஒரு நாடு ஒரு கட்சி என்பதை திணிக்கும் போக்கும் வளர்ந்து வருகிறது. அரசியலமைப்பின் ஒவ்வொரு புனிதமான பகுதியும் ஒரு சர்வாதிகார ஆட்சியால் துண்டு துண்டாக்கப்படுகிறது.


மத்தியில் ஆளும் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக நம்முடைய மதிப்புக்குரிய அரசியலமைப்பு நிறுவனங்களை தரம்தாழ்த்தும் போக்கை கவனமாகக் கையாண்டு வருகிறது. தன்னாட்சி நிறுவனங்கள் மீது அரசியல்ரீதியான தலையீடுகள் வந்துவிட்டன. அதிகாரத்தின் மூலம் தன்னாட்சி நிறுவனங்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது.
கூட்டாட்சி என்பது தினசரி சிதைக்கப்படுகிறது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கான  உரிமைகள் குறைக்கப்படுகின்றன. ஆளும் அரசாங்கத்தின் கொடுங்கோல் போக்கால் நாடாளுமன்றத்தின் செயல்பாடு மிகப்பெரிய பின்னடைவைக் சந்தித்து வருகிறது.


சுயாட்சி கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியான ஊடுருவல்கள் நடக்கின்றன. பெரும்பகுதியான ஊடகங்கள் ஆளும் கட்சிக்கான "பிரச்சாரத்தளங்களாக" மாற்றப்பட்டுள்ளன. மேலும் எந்த எதிர்க்கட்சி தலைவர்கள் மாற்றுக் கருத்துத் தெரிவித்தாலும், அவர்களின் குரல்வலைகள் நெரிக்கப்படுகின்றன.
நாட்டில் பொருளாதார இடைவெளி, வேறுபாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாட்டின் வளங்கள் அனைத்தும் ஒட்டுண்ணி முதலாளிகளிடம், கோடீஸ்வர நண்பர்களிடமும் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒப்படைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அலங்கார ஊர்திகளின் வண்ணமிகு அணிவகுப்புடன், 76 வது குடியரசு தின விழா: டெல்லியில், ஜனாதிபதி திரௌபதி தேசியக் கொடி ஏற்றினார்


பாஜாக போலியான தேசியவாதத்தை, நாட்டுப்பற்றை வெளிப்படுத்துகிறது. தேசியவாதம் என்ற பெயரில் தேசியக் கொடியைப் பிடித்து மதவாதத்தை பரப்புகிறது. ஆனால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆளும் கட்சி கடந்த ஒரு தசாப்தத்தில் மத அடிப்படைவாதத்தில் மூழ்கியிருக்கும் ஒரு கொடூரமான, வெறுக்கத்தக்க விஷயங்களைப் பின்பற்றுகிறது. சிறுபான்மையினர் குறிவைக்கப்படுகிறார்கள், மதச்சார்பற்றவர்கள் கோயபல்சிய பிரச்சாரத்தால் சாயம் பூசப்படுகிறார்கள். பலவீனமான, பின்தங்கிய நிலையில் இருக்கும் எஸ்சி, எஸ்டி ஓபிசி சமூகத்தினர் 2ம்தர குடிமக்கள்போல் நடத்தப்படுகிறார்கள். இவர்கள் மீது தொடர்ந்து அட்டூழியர்கள், தாக்குதல்கள் நடக்கின்றன.
அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்காக நாம் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். இதுதான் நம்முடைய முன்னோர்களுக்கும், சுதந்திரம் பெற்றுக்கொடுத்த தலைவர்களுக்கும் செய்யும் அஞ்சலியாக இருக்கும்
இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலம்: 'பாதுகாப்பு கோட்டை'யாக மாறிய தலைநகர் டெல்லி; 2500 சிசிடிவி, 70 ஆயிரம் வீரர்கள் குவிப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share