×
 

அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறுமா..? ஒன் வேர்டில் பதில் சொன்ன ஓபிஎஸ்!!

அதிமுக பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் ஒற்றை வார்த்தையில் பதிலளித்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜெயலலிதா சிறை சென்றபோது முதலமைச்சர் பதவிக்கு ஜெயலலிதாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓ பன்னீர்செல்வம். இவர்  5 ஆண்டுகள் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் 3 முறை தமிழக முதலமைச்சராகவும் இருந்துள்ளார் குறிப்பாக  ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் 3 வது முறை முதலமைச்சராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து அதிமுகவை வழிநடத்தி வந்தனர். அப்போது 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் யார் முதலமைச்சர் என்ற கேள்வி எழுந்த நிலையில், அந்த பதவியை எடப்பாடி பழனிசாமி பெற்றார்.

இதனால், இபிஎஸ், ஓபிஎஸ் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வந்தது. அது ஒரு கட்டத்தில் இருவரையும் பிரித்தது. இதை அடுத்து இருவரும் தனி தனியே செயல்பட தொடங்கினர். அதன்பிற்கு அதிமுகவை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் பல விதங்களில் முயன்றும் அவரால் கைபற்ற முடியவில்லை. மறுபுறம் அதிமுகவை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த நிலையில், எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: தவெக தலைவர் விஜயுடன் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியா? வெளியான பரபரப்பு தகவல்!!

அதிமுக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை இணைக்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் பாஜக நேரடியாக இந்த விவகாரத்தில் இறங்கி பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் ஒன்று சேர்க்க போராடி வருகிறது. இதனிடையே கோவையில் ஓ.பன்னீர்செல்வம் ஆயுர்வேதா சிகிச்சை மையத்தில் புத்துணர்வு சிகிச்சை முடிந்து தேனி மாவட்டம், பெரியகுளத்திற்கு கார் மூலமாக புறப்பட்டுச் சென்றார்.

அப்போது அவரை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் சந்தித்தனர். அதன்பிற்கு அங்கு செய்தியாளர்கள் கூடினர். அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால் அவர் எந்த கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. அப்போது ஒரு பத்திரிகையாளர் அதிமுக பாஜக கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள்? அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் “இன்று விடுமுறை” என பதில் அளித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.  

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்... கோடநாடு வழக்கை குடையும் சி.பி.சி.ஐ.டி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share