பரந்தூர் விசிட்... முதல் போராட்டக் களத்தில் விஜய்..
நடிகராக இருக்கும்போது ஒவ்வொரு புதுப்பட வெளியீட்டின்போது ஏதோவொரு சிக்கலை எதிர்கொள்வது விஜய்க்கு வழக்கம். அரசியல்வாதியாக மாறிவிட்ட பிறகும் இதுவே தொடர்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில மாநாட்டை நடத்துவதுதற்கு முன்னதாக எங்கே நடத்துவது? என்னென்ன கட்டுப்பாடுகள்? என மிக நீண்ட இழுபறிக்குப் பிறகே விக்கிரவாண்டியில் நடத்துவது என்று முடிவானது. அதேபோன்று தான் பரந்தூர் விவகாரத்திலும் நள்ளிரவு வரை சஸ்பென்ஸ் நீடித்துள்ளது.
பரந்தூரில் உள்ள அம்பேத்கர் திடலில் போராட்டக்காரர்களை சந்தித்து உரையாட வேண்டும் என தவெக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்படி சந்தித்தால் அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்பு உள்ளதால் தனியார் திருமண மண்டபத்தில் சந்திக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. காவல்துறையின் அறிவுரையை ஏற்று இன்று பிற்பகல் 12 மணிமுதல் 1 மணி வரை போராட்டக்காரர்களை விஜய் சந்திக்க உள்ளார்.
இதையும் படிங்க: விஜயின் தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்..! அப்படியே வருவாரா..? அறுத்து விட்டு வருவாரா..?
இவ்வளவு சர்ச்சைக்கு உள்ளாகி உள்ள பரந்தூர் பின்னணி பற்றி பார்ப்போம். சென்னை மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பன்னாட்டு விமான நிலையம் ஆண்டொன்றுக்கு 2 கோடி பயணிகளை கையாள்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இன்னும் அதிகப்படியான பயணிகள் மற்றும் விமானங்களின் வருகை - புறப்பாடு இருக்கும் என்பதால் 2-வது விமான நிலையம் அமைக்க தேவை ஏற்பட்டது. இதற்காக காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் 2-வது பசுமை விமான நிலையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
3000 ஏக்கர் நிலம் தேவைப்படும் என திட்டமிடப்பட்டதால், நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு தொடங்கியது. இதற்காக பரந்தூர் உள்ளிட்ட 19 கிராமங்கள் அளவீடு செய்யப்பட்டன. விமான நிலையம் அமைக்கும் பணிகளுக்கு கிராமவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ஏகனாபுரம் கிராம மக்கள் 900 நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
3774 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கி இந்த மாதம் பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் 2029-ம் ஆண்டு பரந்தூர் பசுமை விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்றும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை - பெங்களுர் எக்ஸ்பிரஸ் சாலைக்கு மிக அருகில் இந்த விமான நிலையம் வரவுள்ளது கூடுதல் வளர்ச்சியை இந்த பகுதியில் உண்டாகும் என்பது அரசின் எதிர்பார்ப்பு.
அரசின் முடிவை தொழில்துறையைச் சார்ந்த பலர் வரவேற்றாலும், வேளாண் நிலங்களை பறிப்பதா? என விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடியாதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஒருபக்கம் விமான நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட்டு விமான நிலையங்களை மட்டும் மத்திய அரசு கட்டுவது ஏன் என்பதும் அவர்களின் வினா.
இதையும் படிங்க: Vijay to meet Parandur protesters: பனையூர் டு பரந்தூர்; விஜய் கையில் எடுத்த ஆயுதம்; பறந்து வந்த கிரீன் சிக்னல்!