பகல்காம் தாக்குதல் எதிரொலி..! இன்று கூடுகிறது நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம்..!
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு கூடுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தீவிரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியாவில் தீவிரப்படுத்த பட்டுள்ளது. போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு கூடுகிறது.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் எதிரொலி..! பிரதமர் தலைமையில் கூடியது அமைச்சரவை கூட்டம்..!
தீவிரவாதிகளின் தாக்குதலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: நாங்க யாருனு இன்னும் தெரியல.. அணு ஆயுதம் ரெடி.. இந்தியாவுக்கு பாக். அமைச்சர் பகிரங்க மிரட்டல்..!