சென்னை - மதுரை தனியார் பேருந்தில் பழு.. ஆர்ப்பாட்டத்தில் குதித்த பயணிகள்!
சென்னையில் இருந்து மதுரை சென்ற தனியார் பேருந்து பழுது ஆகிய நிலையில் மாற்று வாகனம் ஏற்பாடு செய்து தராததால் பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் இருந்து மதுரை சென்ற தனியார் ஆம்னி பேருந்து விராலிமலை போகக்கூடிய சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென பழுதாகி உள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டு பேருந்து பழுது நீக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. நான்கு மணி நேரம் கடந்தும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பயணிகளுக்கு எந்த மாற்று வசதி ஏற்பாடுகள் செய்து தராத தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து பயணிகள் பேருந்து நிர்வாகிகளிடம் கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனை அடுத்து ஆத்திரமடைந்த பயணிகள், தனியார் ஆம்னி பேருந்து நிர்வாகத்தை கண்டித்து டோல்கேட் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழுதாகி நான்கு மணி நேரம் கடந்தும் மாற்று வண்டி ஏற்பாடு செய்து தராததாலும், பேருந்து நிர்வாகம் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அலட்சியமாக பதில் அளித்ததை கண்டித்து பயணிகள் ஆர்ப்பாட்ட திடீர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இதனால் அப்பகுதியில் நீண்ட நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: சின்னாபின்னமாகும் நிதிஷ் கட்சி- வக்ஃபு விவகாரத்தால் கொத்துக் கொத்தாய் வெளியேறும் தலைவர்கள்..!
தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு பின்னர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து போக்குவரத்து போல சார் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானின் மிருகத்தனம்… பல லட்சம் உயிர்களுக்கு உலை: கதறும் உலக நாடுகள்..!