×
 

தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு..! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

தனிநபர் வருமானவரி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருவமானவரி விலக்கு உச்சவரம்பு 12 லட்சமாக உயர்த்தப்படுவதாக மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாடு என்பது வெறும் மண் அல்ல மக்கள் என்பதை கருத்தில் கொண்டு திட்டங்களை உருவாக்கி வருவதாக தனது உரையில் தொடக்கத்தில் அவர் கூறினார். 6 முக்கிய அம்சங்களை கொண்டு இந்த பட்ஜெட்டை உருவாக்க உள்ளாக நிர்மலா தெரிவித்தார். வரி, மின்சாரம், சுரங்கம், நிதி சீர்திருத்தம், ஊரக வளர்ச்சி, ஒருங்கிணைந்த பொருளாதாரம் ஆகியவை இந்த ஆறு அம்சங்கள் ஆகும்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேரடி வரிவிதிப்பு பற்றி நிர்மலா சீதாராமன் கூறுகையில், நாட்டில் 1961 முதல் நடைமுறையில் இருந்த வருமானவரி சட்டங்கள் மாற்றப்பட உள்ளதாக குறிப்பிட்டார். அடுத்தவாரம் புதிய வருமான வரிச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.

இதையும் படிங்க: விவசாயிகளுக்காக ‘பிரதமர் தான் தான்ய கிரிஷி யோஜனா’: பட்ஜெட்டில் அறிவிப்பு

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.. 

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி அவர் வருமானவரி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதன்படி இதுவரை ஆண்டுக்கு 7 லட்சம் வரை ஊதியம் பெறுவோர் வருமானவரி செலுத்த வேண்டியதில்லை என்று இருந்தது. இனி அந்த உச்சவரம்பு 12 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு 12 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் இனி வருமானவரி செலுத்த வேண்டியது இல்லை. அதாவது இனி மாதம் 1 லட்சம் மற்றும் அதற்கு கீழாக ஊதியம் பெறுவோர் பலன் பெறுவார்கள். 

இதேபோன்று மூத்த குடிமக்களுக்கான வருமானவரி பிடித்த வரம்பு ரூ.50 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வீட்டு வாடகைக்கான வரிக்கழிவு ரூ.2.40 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலவரம்பு 2 ஆண்டில் இருந்து 4 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேவையற்ற சட்டசிக்கல்களை எதிர்கொள்வதில் இருந்து சிறுகுறு நிறுவனங்கள் தீர்வு பெறலாம். 

இதையும் படிங்க: இது தெரியுமா? பிப்ரவரி முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share