×
 

இரவோடு இரவாக சீமானுக்கு ஸ்கெட்ச்... லாட்ஜில் போடப்பட்ட மாஸ்டர் பிளான்... பேரதிர்ச்சியில் நாதக...!

சீமான் வீட்டின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தபெகவினரிடமிருந்து மூன்று பெட்ரோல் குண்டுகள் பரிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 

சீமான் வீட்டின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தபெகவினரிடமிருந்து மூன்று பெட்ரோல் குண்டுகள் பரிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 

தந்தை பெரியார் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த 10 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 

சிக்கியது எப்படி? 

சீமான் வீட்டின் மீது தாக்குதல் நடத்த முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கையும், களவுமாக காவல்துறையிடம் சிக்கியது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: சம்மனுக்கு ஆஜராகாமல் கல்தா... சீமான் வீட்டிற்கே வந்த போலீசார்... நீலாங்கரையில் பரபரப்பு...!

 
நேற்று இரவே நீலாங்கரையில் இருக்கக்கூடிய சீமான் வீட்டின் மீது பெட்ரோல் கொண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டு, இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் செல்வதாக உளவுத்துறை போலீசார் மற்றும் தனிப்படை போலீசாருக்கு தகவலானது கிடைக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் வாகன சோதனையை தீவிரப்படுத்தியபோது திருவான்மையூர் காவல் நிலை எல்லைக்கு உட்பட்ட ஈசிஆர் பகுதியில் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். குமார், சுரேஷ் ஆகிய இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த சதித்திட்டத்தில் 8 பேர் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இவர்கள் அனைவரும் பாலாஜி விடுதியில் தங்கி சதி திட்டத்தை திட்டியதாகவும், அங்கிருந்து பெட்ரோல் குண்டு வீச செல்லவிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். 

அவரிடமிருந்து பெட்ரோல் நிரப்பிய மூன்று பாட்டில் பெட்ரோல் குண்டுகளையும் கைது பரிமிதம் செய்திருக்கிறார்கள். அந்த இரண்டு நபர்களிடம் தனிப்படை போலீசார் தனியாக வைத்து விசாரணை நடத்தி அதன் அடிப்படையிலே மேலும் எட்டு நபர்களை கைது செய்திருப்பதாகவும், மேலும் யாரெல்லாம் இதில் தொடர்புடையவர்கள் என்பதை குறித்து விசாரணைகளை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. 

மேலும் 8 பேர் கைது:

 சீமான் தொடர்ந்து பெரியார் குறித்து அவதூறாக பேசி வருவதால் அவரை அச்சுறுத்து விதமாக இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக சீமானின் வீட்டின் அருகே பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டு, அதற்காக இரவோடு இரவே தாக்குதல் சம்பவத்தை நடத்துவதற்காக சென்றபோது இருவரும் போலீசிடம் பிடிபட்டுள்ளனர். 

அவர்களிடம் தொடர்ந்து தனிப்படை போலீசார் தனி ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிற நிலையில், லாட்ஜில் தங்கியிருந்த 8 நபர்களையும் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: பெரியாரைப் பற்றி பேச எந்த அரசியல்வாதிக்கும் தகுதி கிடையாது... டி.டி.வி. தினகரன் ஆவேசம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share