அமெரிக்க தேசிய உளவுப் பிரிவு தலைவருக்கு கலசத்தை கொடுத்த மோடி... உள்ளே என்ன இருக்கு தெரியுமா?
அமெரிக்க தேசிய உளவுப் பிரிவு தலைவர் துளசி கப்பார்ட்க்கு கங்கை நீர் அடைக்கப்பட்ட கலசத்தை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கு, குடியரசுக் கட்சியின் வேட்பாளராகக் கடந்த நவம்பர் மாதம் டிரம்ப் அறிவிக்கப்பட்டார். அப்போதே, நாட்டின் உளவுத்துறை இயக்குநர் பதவிக்கு துளசி கப்பார்டை டிரம்ப் தேர்வுசெய்தார். இதை அடுத்து ட்ரம் அமெரிக்க அதிபர் ஆனார். தனது நிர்வாகத்தில் பலரையும் நியமித்தார். அந்த வகையில், அமெரிக்க உளவுத்துறை தலைவராக துளசி கப்பார்டை நியமித்தார்.
அமெரிக்காவில் உள்ள உளவு மற்றும் விசாரணை அமைப்புகளான சிஐஏ, எப்.பிஐ, என்.எஸ்.ஏ உள்பட 18 உளவு அமைப்புகளை கண்காணிக்கும் பொறுப்பு துளசி கப்பார்டுக்கு உள்ளது. துளசி கப்பார்ட்டுக்கு இயக்குநர் பதவி பிப்ரவரி 12 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சென்றார். அப்போது அங்கு அமெரிக்காவின் உளவுத்துறை இயக்குனரான துளசி கப்பார்டை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, இருநாடுகளுக்கும் இடையே உள்ள ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பயங்கரவாதம், சைபர் அச்சுறுத்தல் உள்ளிட்டவை எதிர்கொள்வது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியுடன் இளையராஜா திடீர் சந்திப்பு… என்ன விஷயமா இருக்கும்?
பின்னர் இந்த சந்திப்பு குறித்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டை வாஷிங்டனில் சந்தித்தேன். அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்தியா-அமெரிக்கா உறவு குறித்து இருவரும் விவாதித்தோம்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்,அமெரிக்க தேசிய நுண்ணறிவு இயக்குநராக இருக்கும் துளசி கப்பார்டு, இந்தியாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா வந்த துளசி கப்பார்டு, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெற்ற சர்வதேச உளவு அமைப்பு தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்றார்.
அப்போது, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசிய அவர், பாதுகாப்பு விவகாரம், தகவல் பரிமாற்றம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடியை துளசி கப்பார்டு சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருவரும் ஒருவருக்கொருவர் பரிசுகளை கொடுத்தனர். பிரதமர் மோடி, உத்தர பிரதேசம் பிரயாக்ராஜ்ஜில் ஓடும் கங்கை நதியில் இருந்து எடுக்கப்பட புனித தீர்த்தத்தை பரிசாக கொடுத்தார். மகா கும்பமேளா நடைபெற்ற இடத்தில் இருந்து இந்த புனித நீர் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: TRUTH SOCIAL MEDIA -வில் இணைந்த பிரதமர் நரேந்திர மோடி..!