×
 

ஒரு முஸ்லிமை காங்கிரஸின் தலைவராக்குங்கள்... 50% சீட் கொடுங்கள்: ராகுலுக்கு மோடி சவால்

மீதமுள்ள சமூகத்தினர் வறுமையில் வாடுபவர்களாகவும், கல்வியறிவு இல்லாதவர்களாகவும், ஏழைகளாகவும் இருந்தனர்.

உங்களுக்கு அனுதாபம் இருந்தால் ஒரு முஸ்லிமை காங்கிரசின் தலைவராக்குங்கள், அவருக்கு 50% டிக்கெட்டுகளை கொடுங்கள் என ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.

ஹரியானாவின் ஹிசாரில், வக்ஃபு திருத்தச் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடி காங்கிரஸை விமர்சித்து பேசினார். ''காங்கிரஸ் கட்சி முஸ்லிம்கள் மீது இவ்வளவு அனுதாபம் கொண்டிருந்தால், ஏன் ஒரு முஸ்லிமை அதன் கட்சியின் தலைவராக ஆக்குவதில்லை. முஸ்லிம்களுக்கு நாடாளுமன்றத்தில் 50 சதவீத தொகுதிகளை கொடுங்கள். அவர்கள் வெற்றி பெறும்போது, ​​ தங்களது கருத்தைச் சொல்வார்கள்.

யாருக்கும் கெடுதல் செய்ய வேண்டும் என்பது எங்களது நோக்கம் அல்ல. முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் கிடைத்துவிடக்கூட்டாது என்பதே காங்கிரசின் உண்மையான நோக்கம். காங்கிரஸின் திருப்திப்படுத்தும் அரசியல் முஸ்லிம் சமூகத்திற்கு பயனளிக்கவில்லை. மாறாக அவர்களுக்கு தீங்கு விளைவிக்கிறது. காங்கிரஸ் சில அடிப்படைவாதிகளை மட்டுமே திருப்திப்படுத்தத் தேர்ந்தெடுத்தது. மீதமுள்ள சமூகத்தினர் வறுமையில் வாடுபவர்களாகவும், கல்வியறிவு இல்லாதவர்களாகவும், ஏழைகளாகவும் இருந்தனர்.

இதையும் படிங்க: அம்பேத்கர் பிறந்தநாள்..! பிரதமர் மோடி, ஜனாதிபதி மரியாதை..!

காங்கிரஸின் இந்தத் தீய கொள்கைக்கு மிகப்பெரிய சான்று வக்ஃப் சட்டம். புதிய விதிகள் வக்ஃபின் புனித உணர்வை மதிக்கும். வக்ஃப் பெயரில் லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலம் இருக்கிறது. வக்ஃபு சொத்துக்களின் பலன்கள் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் பயனடைந்திருப்பார்கள். ஆனால் இந்த சொத்துக்கள் நில மாஃபியாக்களுக்கு பயனளித்தன. இந்த திருத்தப்பட்ட வக்ஃபு சட்டம் ஏழைகள் சுரண்டப்படுவதை நிறுத்தும்.

இப்போது, ​​புதிய வக்ஃபு சட்டத்தின் கீழ், இந்த வக்ஃப் வாரியம் இந்தியாவின் எந்த மூலையிலும் உள்ள எந்த பழங்குடியினரின் நிலத்தையோ அல்லது சொத்தையோ தொட முடியாது. புதிய விதிகள் மூலம், ஏழை மற்றும் பாஸ்மண்டா குடும்பங்கள், பெண்கள், குறிப்பாக முஸ்லிம் விதவைகள் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் குழந்தைகள் தங்கள் உரிமைகளைப் பெறுவார்கள். அவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும். இதுதான் உண்மையான சமூக நீதி'' என அவர் தெரிவித்துள்ளார்.
 

இதையும் படிங்க: இளைஞர்களுக்கான கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share