×
 

காஷ்மீருக்கு முதல் ‘வந்தே பாரத் ரயில்’.. வரும் 19ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

முதல் முறையாக ஜம்மு காஷ்மீருக்கு வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாறியபின், முதல் முறையாக காஷ்மீருக்கு வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது. வரும் 19ம் தேதி ஜம்முவின் கட்டாராவில் இருந்து காஷ்மீர் வரையிலான வந்தே பாரத் ரயில்போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா இடையிலான 272 கி.மீ ரயில் இருப்புப்பாதை திட்டம் நிறைவடைந்ததையடுத்து, வந்தே பாரத் ரயில் காஷ்மீர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜம்மு-கத்ரா-ஸ்ரீநகர் இடையிலான வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கத்ராவில் இருந்து வரும் 19ம் தேதி தொடங்கும். ஜம்மு ரயில் நிலையத்தில் பராமரிப்ப மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகிறது, கடந்த மாதத்திலேயே இருப்புப் பாதையை இணைக்கும் பணிகள் முடிந்தநிலையில்  கத்ரா-பாரமுல்லா இடையே சோதனை ரயில் ஓட்டமும் நடந்துள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் வருகை எதிரொலி.. மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்கு செல்லத் தடை.. ட்ரோன் பறக்கவிடவும் தடை..!

கத்ரா முதல் காஷ்மீர் இடையிலான ரயில் போக்குவரத்து தொடங்க கடந்த ஜனவரி மாதமே ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதியளித்துவிட்டார். ஜம்மு முதல் ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து தொடங்கினால் பயண நேரம் கணிசமாகக் குறையும். ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு நவீன, அதிவேகமான ரயில்வே முதல்முறையாக கிடைக்கிறது.

காஷ்மீர் வரை ரயில்போக்குவரத்து நீட்டிக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை இப்போது நனவாக இருக்கிறது. தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் சாங்கல்டான் முதல் பாரமுல்லா வரை மட்டுமே ரயில்போக்குவரத்து இருக்கிறது. அதன்பின் காஷ்மீர் செல்ல சாலை மார்க்கமே செல்ல வேண்டும்.

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நிருபர்களிடம் பேசுகையில் “ வரும் 19ம் தேதி உதம்பூருக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு உலகிலேயே மிக உயரத்தில் எழுப்பப்பட்டுள்ள, கட்டப்பட்டுள்ள ரயில்பாலத்தை தொடங்கி வைக்கிறார், அதன்பின் கத்ரா நகரில் இருந்து காஷ்மீர் வரையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்” எனத் தெரிவித்தார்.

கடந்த 1997ம் ஆண்டிலிருந்து காஷ்மீருக்கு ரயில் போக்குவரத்தை கொண்டு வர வேண்டும் என அப்போது முதல் திட்டமிடப்பட்டது. ஆனால், தீவிரவாதத் தாக்குதல், இயற்கைச் சூழல், அமைவிடம், மழை போன்றவை சவாலாக இருந்தன. இந்த கத்ரா முதல் காஷ்மீர் வரையிலான ரயில் பாதையில் 38 குகைப்பாதைகள் மூலம் 119 கி.மீ தொலைவை ரயில் கடக்கிறது. இதில் டி49 என்ற குகை 12.75 கி.மீ நீளம் கொண்டது. தேசத்திலேயே நீளமான குகைப் போக்குவரத்து இங்குதான் இருக்கிறது.

இந்தத் திட்டத்தில் 927 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன, 13 கி.மீ தொலைவு பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது. செனாப் பாலம், 1,315 மீட்டர் நீளமும், 467 வளைவும், 359 மீட்டர்  உயரத்திலும் ஆற்றின் நடுவே அமைந்துள்ளது. ஏறக்குறைய பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள ஈபில் டவர் உயரத்தைவிட 35 மீட்டர் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயரத்தில் அமைக்கப்பட்ட ரயில்பாலம் என்று பிற்காலத்தில் கின்னஸிலும் இடம் பெறும்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி ‘ரொம்ப ஸ்மார்ட்’..! பரஸ்பர வரி சிறப்பாக செயல்படும்: அதிபர் ட்ரம்ப் புகழாரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share